»   »  ஓவியாவை மறக்கவே மாட்டேன், நான் உயிரோடு இருக்க ஒருவரே காரணம்: தயாரிப்பாளர் பேட்டி

ஓவியாவை மறக்கவே மாட்டேன், நான் உயிரோடு இருக்க ஒருவரே காரணம்: தயாரிப்பாளர் பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓவியாவை ஒருபோதும் மறக்க மாட்டேன் என்று தயாரிப்பாளர் மதுரை செல்வம் தெரிவித்துள்ளார்.

ராஜதுரை இயக்கத்தில் ஓவியா நடித்துள்ள படம் ஓவியாவ விட்டா யாரு. இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். படத்தை மதுரை செல்வம் தயாரித்துள்ளார்.

படம் குறித்து செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

ஓவியா

ஓவியா

ஓவியா இன்று வரை எனக்கு ஆதரவு அளித்து வருகிறார். அவரை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். ஓவியாவுக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டவனாக இருப்பேன்.

ஆதரவு

ஆதரவு

என் தயாரிப்பு பயணத்தில் தூண் போன்று உறுதுணையாக உள்ளவர் ஓவியா. இந்த நேரத்தில் நான் பலருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ஆனால் என் வலி, வேதனையால் கண்ணீர் தான் வருகிறது.

மனைவி

மனைவி

நான் பல கஷ்டங்களை தாண்டி வந்துள்ளேன். என் மனைவி, குழந்தைகள் கூட என்னை கைவிட்டுவிட்டார்கள். ஆனால் எனக்கு ஆதரவாகவும், உதவியாகவும் இருந்தவர் ஒருவர் தான். அவர் தான் தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த கதிரேசன்.

நன்றி

நன்றி

கடந்த ஓராண்டாக நான் உயிருடன் இருக்க காரணமே கதிரேசன் தான். அவருக்கு எப்பொழுதும் நன்றி தெரிவித்துக் கொண்டே இருப்பேன். கதிரேசன், விஷால், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஆதரவு இருக்கும் வரை நான் இன்னும் 5 படங்களை தயாரிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது.

தியேட்டர்

தியேட்டர்

ஓவியாவ விட்டா யாரு படம் விரைவில் ரிலீஸாகும். என் கஷ்ட காலத்தில் என்னுடன் இருந்த டிசைனர் ஸ்ரீதர், மேனேஜர் சுவாமிநாதனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் செல்வம்.

Read more about: oviya, ஓவியா
English summary
Oviyava Vitta Yaru movie producer Madurai Selvam said that he will never ever forget Oviya for being a pillar of support to him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil