அப்டிப் போடு...கோடிக்கணக்கில் வச்சாலும் எடுக்க மாட்டேன்... அடித்துச் சொல்லும் தாமரை
சென்னை : பிக்பாசில் பணப் பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேற போகிறவர் யார் என்பதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. பரிசுத் தொகை அதிகரிக்க அதிகரிக்க போட்டியாளர்களின் மனநிலையும் மாறி வருகிறது.
Recommended Video
நேற்று, பணத்தை நான் எடுக்க வாய்ப்புள்ளது என சொல்லிக் கொண்டிருந்த நிரூப்பும், பாவனியும் இன்று, பரிசுத் தொகை இவ்வளவு இருந்தால் யோசிக்கலாம் என்கிறார்கள். நேற்று கண்டுகொள்ளாமல் இருந்த பிரியங்கா, தான் சொல்லும் தொகை இருந்தால் எடுத்துக் கொண்டு போவதாக சொல்கிறார்.

கூடும் சுவாரஸ்யம்
போட்டியாளர்கள் மனநிலை மாறி வருவதால், இவர் தான் பணப்பெட்டியை எடுப்பார் என மக்கள் வைத்திருந்த கணிப்பும் மாறி வருகிறது. இதனால் பிக்பாசில் இந்த வார எபிசோட்களில் சுவாரஸ்யம் கூடி வருகிறது. இந்நிலையில் இன்றைய 94 வது நாளுக்கான ப்ரோமோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மாறும் மனநிலை
இதன் முதல் ப்ரோமோவில், நேற்று 3 லட்சமாக இருந்த பரிசுத்தொகை, இன்று 5 லட்சம், 7 லட்சம் என உயர்த்தப்படுகிறது. இதை பார்த்து 15 லட்சம் வைத்தால் யோசிப்பேன் என்கிறார் பாவனி. இங்கு ஒரு 4, ஒரு ஜீரோ போட்டால் எடுத்துக் கொண்டு போய் கொண்டே இருப்பேன் என்கிறார் பிரியங்கா. பரிசுத்தொகை 25 லட்சம் வரை உயர்த்தப்படலாம் என்கிறார் நிரூப்.

நான் எடுக்கவே மாட்டேன்
இதைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள இரண்டாவது ப்ரோமோவில், தாமரையும் நிரூப்பும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதில், என்ன ஆனாலும் பணத்தை எடுத்து விடாதே என தாமரையிடம் சொல்கிறார் நிரூப். பதிலுக்கு தாமரை, நான் ஏன்டா எடுக்க போறேன். கேம் விளையாடுகிறேன் என நீ தான் சொல்லிக் கொண்டிருப்பாய். அதனால் இதையும் கேமாக நினைத்து நீ எடுக்காமல் இருந்தால் சரி. கோடிக்கணக்கில் வைத்தாலும் நான் எடுக்க மாட்டேன் என அடித்துச் சொல்கிறார்.

மக்களின் எதிர்பார்ப்பு இவர்
ஆனால் இதுவரை சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் பகிர்ந்து வரும் கருத்துக்களின்படி பெரும்பாலானவர்கள் சொல்வது தாமரை தான் பணப்பெட்டியோடு வெளியேறுவார் என்று. ஆனால் நேற்றும் தாமரை அந்த பணத்தை பற்றி பேசவில்லை. இன்று வெளியாகி உள்ள இரண்டு ப்ரோமோக்களிலும் எவ்வளவு வைத்தாலும் தான் அதை எடுக்க மாட்டேன் என்று தான் சொல்லி வருகிறார்.

நிரூப் தான் எடுக்க போறார்
இதனால் ப்ரோமோக்களை பார்த்து விட்டு பலரும், இப்படியே எல்லோர் கிட்டையும் சொல்லிட்டு கடைசியில நிரூப் தான் அந்த பணத்தை எடுக்க போகிறார். ஒருவரும் இந்த பணப்பெட்டியை எடுக்க மாட்டார்கள். கடந்த சீசன்களை விட இந்த சீசன் பெட்டர் என்பதற்கு இந்த பணப்பெட்டி டாஸ்க் தான் மிகச் சிறந்த உதாரணம். ஒரு பணப்பெட்டியை வைத்தே இரண்டு எபிசோட்களை ஓட்டுறீங்களே செம பிக்பாஸ் என கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











