»   »  'அந்த' தப்பை பாலிவுட்டில் செய்ய மாட்டேன்: டாப்ஸி

'அந்த' தப்பை பாலிவுட்டில் செய்ய மாட்டேன்: டாப்ஸி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தென்னிந்திய படங்களில் செய்த தவறுகளை பாலிவுட்டில் செய்ய மாட்டேன் என்று டாப்ஸி தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார் டாப்ஸி. பாலிவுட்டில் தற்போது டாப்ஸிக்கு நல்ல மார்க்கெட் உள்ளது. அவர் வருண் தவான் ஜோடியாக நடித்துள்ள ஜுட்வா 2 படம் செப்டம்பர் மாதம் ரிலீஸாகிறது.

இந்நிலையில் சினிமா பயணம் பற்றி டாப்ஸி கூறியிருப்பதாவது,

நடிகை

நடிகை

நடிகையாக இருந்து கொண்டு கருத்துகளை துணிச்சலாக சொல்வது, சுயமரியாதையை விட்டுக் கொடுக்க மறுப்பது கடினமானது. என் சுயமரியாதையை விட்டுக் கொடுக்க வேண்டுமா இல்லை என் எதிர்காலத்திற்கு நல்லது செய்யும் விஷயத்தை செய்வதா என்று என்னை நானே சில நேரம் கேட்பது உண்டு.

சுயமரியாதை

சுயமரியாதை

சில நேரங்களில் என் சுயமரியாதைக்காக நான் உறுதியாக இருக்க வேண்டி உள்ளது. அது சிலருக்கு பிடிப்பது இல்லை. தற்போது நடிகைகளுக்கு முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.

படம்

படம்

நடிகைகள் தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன், ப்ரீ-ப்ரொடக்ஷன், ப்ரொமோஷன்களில் பங்கெடுக்கிறார்கள். நான் பலவகையான படங்களில் நடிக்க விரும்புகிறேன்.

பாலிவுட்

பாலிவுட்

பாலிவுட்டுக்கு வரும் முன்பு தெற்கு பக்கம் நிறைய படங்களில் நடித்துள்ளேன். அந்த அனுபவங்களை வைத்து தற்போது இங்கு படங்களை தேர்வு செய்கிறேன். அங்கு செய்த தவறுகளை மீண்டும் செய்ய மாட்டேன். புதிய தவறுகளை செய்து அதில் இருந்து கற்றுக் கொள்வேன் என்கிறார் டாப்ஸி.

English summary
Actress Taapsee said that, "I have done a lot of work in south before Bollywood happened and I apply that experience when I choose a film now. I will not repeat those mistakes."
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil