»   »  இறுதி மூச்சு உள்ளவரை பாடிக் கொண்டே இருப்பேன் - சங்கர் மகாதேவன்

இறுதி மூச்சு உள்ளவரை பாடிக் கொண்டே இருப்பேன் - சங்கர் மகாதேவன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: என் வாழ்நாளின் இறுதி மூச்சு உள்ளவரை பாடிக் கொண்டே இருப்பேன் என்று பாடகரும், இசையமைப்பாளருமான சங்கர் மகாதேவன் கூறியிருக்கிறார்.

4 தேசிய விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளை பெற்றிருக்கும் சங்கர் மகாதேவன் தற்போது ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு இசை வகுப்புகளையும் நடத்தி வருகிறார்.

உலகம் முழுவதும் 36,௦௦௦ வகுப்புகளுக்கும் அதிகமாக இதுவரை சொல்லித் தந்திருக்கும் இவருக்கு உலகம் முழுவதும் சுமார் 5௦௦௦ க்கும் அதிகமான மாணவர்கள் இருக்கின்றனர்.

I Will Sing till the Last Breath of My Life - Shankar Mahadevan

47 நாடுகளில் உள்ளவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் எடுத்து வரும் சங்கர் மகாதேவன் சமீபத்திய பேட்டியொன்றில் பின்வருமாறு கூறியிருக்கிறார்.

"நான் எனது கடைசி மூச்சுவரை உள்ளவரை பாடிக் கொண்டே இருப்பேன். இந்த வயதான பாடகனின் பாடலை யார் கேட்பது என்று மக்கள் கூறினாலும் நான் பாடுவதை விடமாட்டேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

48 வயதாகும் சங்கர் மகாதேவன் கட்யார் கல்ஜாட் க்ஹுசாலி என்ற மராத்திப் படமொன்றில் நடிகராக அறிமுகமாகவிருக்கிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சுபோத் பாவே என்பவர் இயக்குகிறார்.

பாடகர், இசையமைப்பாளரைத் தொடர்ந்து நடிகராக சங்கர் மகாதேவன் மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Singer cum Composer Shankar Mahadevan says in Recent Interview "I Will Sing till the Last Breath of My Life".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil