»   »  சென்னை டூ சிங்கப்பூர் காரில் செல்வது எப்படி?.. அஜீத்திடம் கேட்ட ஜிப்ரான்

சென்னை டூ சிங்கப்பூர் காரில் செல்வது எப்படி?.. அஜீத்திடம் கேட்ட ஜிப்ரான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இசையமைப்பாளர் ஜிப்ரான் சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு காரில் எப்படி செல்வது? என்று நடிகர் அஜீத்திடம் கேட்டிருக்கிறார்.

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் ஒருவர் ஜிப்ரான். வாகை சூடவா படத்தின் மூலம் அறிமுகமான ஜிப்ரான் தொடர்ந்து பாபநாசம், தூங்காவனம் மற்றும் உத்தமவில்லன் போன்ற படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களைக் கவர்ந்தவர்.

தற்போது ஜிப்ரான் மனதில் ஒரு ஆசை தோன்றியிருக்கிறது. அதாவது சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு காரில் செல்ல வேண்டும் என்பதே அது.

இதில் சிங்கப்பூருக்கு எப்படி காரில் செல்வது என்று தனக்கு தெரியவில்லை. இதனால் கார் ஓட்டுவதில் மன்னன் என்று பெயரெடுத்த நடிகர் அஜீத் தனக்கு உதவ வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.

இவர் பதிவிட்ட இந்த ட்வீட்டிற்கு அஜீத்தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் இதுவரை வரவில்லை. எனினும் அவரது ரசிகர்கள் கண்டிப்பாக அஜீத் உங்களுக்கு உதவி செய்வார்.

சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு பாதுகாப்பாக சென்று வாருங்கள் என்று கூறி வருகின்றனர். இந்த விஷயத்தில் ஜிப்ரானுக்கு அஜீத் உதவி செய்வாரா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

English summary
Music Composer Ghibran Wrote on Twitter "A random wish.So many reactions!I wish I can get advice frm the KING of Drives in Kollywood for Chennai 2 Singapore!
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos