»   »  விளம்பரப் படங்களில் நடிப்பதை கேவலமாக நினைக்கிறேன்: ராஜ்கிரண்

விளம்பரப் படங்களில் நடிப்பதை கேவலமாக நினைக்கிறேன்: ராஜ்கிரண்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விளம்பர படத்தில் நடிப்பதை கேவலமாக கருதுவதாக நடிகர் ராஜ்கிரண் தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகள் கழித்து ராஜ்கிரண் ஹீரோவாக நடித்துள்ள ப. பாண்டி படம் வரும் 14ம் தேதி ரிலீஸாகிறது. தனுஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் நீங்கள் இதுவரை பார்த்திராத ராஜ்கிரணை பார்ப்பீர்கள்.

பிரபலங்கள் விளம்பரப் படங்களில் நடிப்பது புதிது அன்று. இந்நிலையில் இது குறித்து ராஜ்கிரண் கூறியிருப்பதாவது,

விளம்பரம்

விளம்பரம்

படத்தில் நடிக்கும்போது மக்களுக்கு நல்ல கருத்தை தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால் விளம்பரப் படங்களில் நடிப்பதில் அப்படி எதுவும் இல்லை.

பணம்

பணம்

விளம்பரப் படங்களில் நடிப்பது காசுக்காக மட்டுமே. விளம்பரப் படங்களில் நடிப்பதை கேவலமான விஷயமாக கருதுகிறேன். அது எப்படி ஒரு பொருளை பற்றி தெரியாமல் அதை விளம்பரப்படுத்துவதோ.

ஏமாற்று வேலை

ஏமாற்று வேலை

ஒரு பொருளை பற்றி எதுவுமே தெரியாமல் காசுக்காக அதை விளம்பரப்படுத்துவது மக்களுக்கு செய்யும் துரோகம். நான் அந்த துரோகத்தை செய்ய மாட்டேன்.

ராஜ்கிரண்

ராஜ்கிரண்

நான் ஒரு பொருளை விளம்பரப்படுத்தினால் ராஜ்கிரணே கூறிவிட்டார் என்ற நம்பிக்கையில் மக்கள் வாங்குவார்கள். அது தவறான பொருளாக இருந்தால் அது நான் மக்களுக்கு செய்யும் துரோகமாகிவிடும் என்றார் ராஜ்கிரண்.

English summary
Actor Rajkiran said that he won't act in advertisements as he considers it as a cheating act.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil