»   »  பாலியல் தொல்லை விவகாரம்: நாட்டாமை மகள் வரலட்சுமிக்கு எவ்ளோ பெரிய மனசு!

பாலியல் தொல்லை விவகாரம்: நாட்டாமை மகள் வரலட்சுமிக்கு எவ்ளோ பெரிய மனசு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனி நபர் செய்த தவறுக்காக டிவி சேனலை குறை கூறி என்ன செய்ய என்று பெருந்தன்மையாக பேசியுள்ளார் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

பிரபல தொலைக்காட்சி சேனலின் நிகழ்ச்சி தயாரிப்பு பிரிவு தலைவர் தன்னிடம் தகாத முறையில் பேசி வெளியே அழைத்ததாக நடிகை வரலட்சுமி சரத்குமார் ட்விட்டரில் தெரிவித்தார்.

இந்நிலையில் இது குறித்து அவர் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,

பெண்கள்

பெண்கள்

பாலியல் புகார்களில் பாதிக்கப்பட்ட பெண்களை அல்ல மாறாக தவறு செய்யும் ஆண்களை தான் அசிங்கப்படுத்த வேண்டும். பெண்கள் துணிந்து செயல்பட வேண்டிய நேரம் இது.

பேசலாம்

பேசலாம்

பெண்களிடம் தவறாக பேசுவதில் தவறு இல்லை என்று சிலர் நினைக்கிறார்கள். அவர்கள் படித்தவர்களா, இல்லையா என்பது நமக்கு தெரியவில்லை. இதை மாற்ற வேண்டும்.

மிருகத்தன்மை

மிருகத்தன்மை

பெண்களிடம் தவறாக நடந்து கொள்வது மிருகத்தன்மையே தவிர மனிதத்தன்மை இல்லை. பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை அளிக்கும் வரை அவர்கள் இப்படித் தான் நடந்து கொள்வார்கள்.

உடன் கட்டை ஏறுதல்

உடன் கட்டை ஏறுதல்

ஒரு காலத்தில் உடன் கட்டை ஏறுதல் சட்டப்படி செல்லும். பின்னர் அம்முறையை நாம் ஒழித்தோம். அது போன்று தான் தற்போதே செயல்படாவிட்டால் நம் எதிர்கால சந்ததியினரால் பலாத்காரம் உள்ளிட்ட பாலியல் கொடுமைகளை ஒழிக்க முடியாது.

டிவி

டிவி

டிவி சேனலில் வேலை பார்க்கும் அவர் செய்தித்தாளை திறந்தால் பெயர் இல்லாவிட்டாலும் அது தன்னை பற்றி தான் என தெரியும். நாம் ஒட்டுமொத்த சமூகத்தை குறி வைக்க வேண்டுமே தவிர தனி நபரை அல்ல. நான் அந்த சேனலை தாக்கி பேச விரும்பவில்லை. இது அவர்களின் தவறு இல்லை. இது தனி நபரின் தவறு என வரலட்சுமி தெரிவித்துள்ளார்.

English summary
Varalakshmi Sarathkumar said that she doesn't want to attack the TV channel as its programming head misbehaved with her.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil