»   »  எவ்வளவு திட்டினாலும் எனக்கு கோபமே வராது, ஏன்னா... விஷால்

எவ்வளவு திட்டினாலும் எனக்கு கோபமே வராது, ஏன்னா... விஷால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அனைவருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். அதனால் என்னை எவ்வளவு திட்டினாலும் கோபமே வராது என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

ஜீவன், சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோரை வைத்து சக்தி சிதம்பரம் இயக்கியுள்ள படம் ஜெயிக்கிற குதிர. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

விழாவில் நடிகர்கள் விஷால், ஆர்யா, இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர், தயாரிப்பாளர்கள் ஏ.எல்.அழகப்பன், டி.சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய விஷால் கூறுகையில்,

ஆர்யா

ஆர்யா

இந்த விழாவுக்கு கிளம்பியபோது ஆர்யா என்னிடம் உன் பட இசை வெளியீட்டு விழாவுக்கே போக மாட்ட, அப்புறம் எப்படி மச்சான் இதுக்கு மட்டும் போகிற என்று கேட்டான்.

திரையுலகம்

திரையுலகம்

இன்னும் 2 ஆண்டுகளுக்கு திரையுலகம் இப்படி தான் செயல்படும். நமக்கு தொடர்பில்லாத படங்களையும் விளம்பரப்படுத்துவதே எங்களின் நோக்கம் என்று ஆர்யாவிடம் நான் கூறினேன்.

நண்பர்கள்

நண்பர்கள்

சக்தி சிதம்பரம் தொடர்ச்சியாக படம் எடுக்க வேண்டும். நாங்கள் அவருக்கு ஆதரவாக நிற்போம். எஸ்.ஏ.சந்திரசேகர், தேனப்பன், டி.சிவா என அனைவருமே எனக்கு நல்ல நண்பர்கள்.

 கோபம்

கோபம்

அனைவருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். அதனால் என்னை எவ்வளவு திட்டினாலும் கோபமே வராது. விஷாலை கைது செய், கைது செய் என்று டிவியில் வந்த செய்தியை சூப்பர் காமெடி என ஏதோ காமெடி சேனலை பார்ப்பதை போன்று என் பெற்றோர் பார்த்தனர்.

 நடிகர் சங்கம்

நடிகர் சங்கம்

நடிகர் சங்க தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளோம். எங்களை வளர்த்துவிட்ட திரையுலகம் நல்ல வழியில் செல்லவே இளைஞர்கள் வந்திருக்கிறோம் என்றார் விஷால்.

English summary
Actor Vishal said that he won't gt angry at all as he wants to help and do good to everybody.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil