»   »  நான் பிக் பாஸ் வீட்டில் இருந்திருந்தால் ஓவியாவுடன் சண்டை போட்டிருப்பேன்: சதீஷ்

நான் பிக் பாஸ் வீட்டில் இருந்திருந்தால் ஓவியாவுடன் சண்டை போட்டிருப்பேன்: சதீஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஓவியாவுடன் சண்டை போட்டிருப்பேன்: சதீஷ்-வீடியோ

கோவை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றால் போட்டியாளர்கள் செய்த அதே தவறுகளை செய்திருப்பேன். மக்களுக்கு பிடித்த ஓவியாவுடன் சண்டை போட்டிருப்பேன் என்று சதீஷ் தெரிவித்துள்ளார்.

காமெடி நடிகர்கள் ஹீரோவாக மாறி வரும் காலம் இது. காமெடியில் கலக்கி வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார். இந்நிலையில் இது குறித்து காமெடி நடிகர் சதீஷிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் கூறியதாவது,

காமெடி

காமெடி

நான் காமெடி மற்றும் சில சீரியஸான கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளேன். என்னை தேடி வரும் வாய்ப்புகளால் மகிழ்ச்சி. நாகேஷ் சார், கவுண்டமணி சார், வடிவேலு சார் ஆகிய லெஜண்டுகள் சீரியஸ் மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சந்தானம்

சந்தானம்

சந்தானம் இந்த துறையில் பல காலமாக உள்ளார். அவர் பல சாதனை புரிந்துள்ளார். நானோ தற்போது தான் சினிமா வாழ்க்கையை துவங்கியுள்ளேன்.

ஹீரோ

ஹீரோ

தற்போது நான் ஹீரோவாக நடிக்க ஆர்வமாக இல்லை. மேலும் நான் ஹீரோவாக நடித்தால் யார் அந்த படத்தை பார்ப்பார்கள்? ஹீரோவின் நண்பனாக நடிப்பதே போதும்.

நண்பன்

நண்பன்

ஹீரோவின் நண்பன் சுவாரஸ்யமான கதாபாத்திரம். படம் முழுக்க ஹீரோவின் நண்பனாக வருவான். அவனின் பெற்றோர் யார், என்ன வேலை செய்கிறான், எங்கே வசிக்கிறான் என்று யாருக்கும் தெரியாது.

போட்டி

போட்டி

நிறைய பேர் காமெடி செய்கிறார்கள். சூரி ஆகட்டும், யோகி பாபுவாகட்டும் நாங்கள் அனைவரும் நண்பர்கள். நிஜ வாழ்க்கையில் நடிக்க முடியாது. எங்களுக்கு இடையே போட்டி இல்லை.

பிக் பாஸ்

பிக் பாஸ்

நான் தற்போதும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கிறேன். ஆனால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றால் போட்டியாளர்கள் செய்த அதே தவறுகளை செய்திருப்பேன். மக்களுக்கு பிடித்த ஓவியாவுடன் சண்டை போட்டிருப்பேன். அதனால் நிகழ்ச்சியை பார்ப்பதோடு நிறுத்திக் கொள்ள விரும்புகிறேன் என்றார் சதீஷ்.

English summary
Comedian Sathish said that he would have fought with Oviya if he was a part of Big Boss.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil