Don't Miss!
- Technology
புண்பட்ட நெஞ்சை FREE டேட்டாவை வச்சு தேத்திக்கோங்க.. Vodafone அறிவித்துள்ள "அடேங்கப்பா" ஆபர்!
- News
முதுபெரும் தலைவர் நல்லக்கண்ணுக்கு உடல் நலம் பாதிப்பு..ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை
- Finance
சென்செக்ஸ் 670 புள்ளிகள் சரிவு.. 2 முக்கியக் காரணம்..!!
- Sports
திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள்.. இல்லை சூர்யகுமாரால் ஆபத்து வரும்.. நெஹ்ரா கொடுத்த எச்சரிக்கை
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய மாருதியின் விலை குறைவான கார்! திருவிழா மாதிரி பொதுமக்கள் கூட்டம் கூடுதாம்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
விஜய் நினைத்திருந்தால் மாஸ்டரில் நான் காணாமல் போயிருப்பேன்!
சென்னை: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக உள்ளவர்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதி
இருவரும் தனித்தனி பாதையில் பயணித்துக் கொண்டு இருந்தாலும் மாஸ்டர் படத்தில் இருவரும் ஹீரோ மற்றும் வில்லனாக நடித்து பட்டையை கிளப்பி இருப்பார்கள்
விஜய் மட்டும் நினைத்து இருந்தால் மாஸ்டர் படத்தில் நான் காணாமல் போயிருப்பேன் என விஜய் சேதுபதி உருக்கமாக பேசியுள்ளார்.
அனிருத் என் படம்னா ரொம்ப அக்கறையா வேலை பார்ப்பார் !

மாஸ்டர்
விஜய் சேதுபதியின் திரைப்படங்கள் என்றாலே ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும் அதனாலேயே விஜய் சேதுபதியின் படங்களுக்கு தமிழ் மொழியையும் தாண்டி மற்ற மொழிகளிலும் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. முன்னணி ஹீரோவாக இருக்கும் போதே சிறப்பு தோற்றத்திலும் குணசித்திர வேடங்களிலும் ஏன் வில்லனாகவும் நடிக்கும் ஒரே நடிகர் தமிழ் சினிமாவில் இருப்பார் என்றால் அது கட்டாயமாக விஜய் சேதுபதி தான் இருக்க முடியும் அவ்வாறு எந்த ஒரு இமேஜையும் பற்றி கவலைப்படாமல் கதையையும் கதாபாத்திரத்தையும் மட்டும் பார்த்து நடித்து வரும் விஜய் சேதுபதி மற்றும் விஜய் இணைந்து நடித்த திரைப்படம் மாஸ்டர்.

வெளிநாடுகளிலும் வசூல் சாதனை
மாநகரம்,கைதி என இரண்டு பிளாக்பஸ்டர் வெற்றிகளை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய் குடிப்பழக்கம் உள்ள கல்லூரி ப்ரொஃபஸராக நடித்திருப்பார். மாஸ்,கிளாஸ்,ஸ்டைல் என விஜய் படங்களுக்கு என்னவெல்லாம் இருக்க வேண்டுமோ அனைத்து அம்சங்களும் பொருந்திய படமாக வெளியான மாஸ்டர் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தியாவையும் கடந்து வெளிநாடுகளிலும் வசூல் சாதனை புரிந்தது. இதில் விஜய் சேதுபதி பவானி என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக மிரட்டியிருப்பார். விஜய் மற்றும் விஜய் சேதுபதி என இருவருக்குமே இந்த படத்தில் சரிசமமான கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கும்.

பவானி கதாபாத்திரம்
குறிப்பாக விஜய்சேதுபதியின் பவானி கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அந்த அளவிற்கு வில்லனாக விஜய் சேதுபதி மிக கச்சிதமாக பொருந்தி இருந்தார். இந்த நிலையில் மாஸ்டர் படத்தில் பணியாற்றியபோது விஜய் மற்றும் விஜய் சேதுபதி இடையேயான ஒவ்வொரு காட்சி எடுக்கப்படும் போதும் எப்படி செய்யலாம் என்று விஜய்யிடம் அறிவுரை கேட்பாராம். அதற்கு விஜய் சிம்பிளாக உங்களுக்கு என்ன தோணுதோ அதை செய்யுங்க என பண்புடன் கூறியுள்ளார்.

நான் காணாமல் போயிருப்பேன்
மிகப் பெரிய ஹீரோ இப்படி கூறியது என்னை பிரமிக்க வைத்தது என விஜய் சேதுபதி கூறியிருந்தார். மேலும் டப்பிங் செய்தபோது கொம்பு வைத்தபடி பேசிய காட்சியை பார்த்த விஜய் விழுந்து விழுந்து சிரித்து என்ஜாய் செய்ததாகவும். ஏதாவது ஒரு இடத்தில் விஜய் தன்னைவிட விஜய் சேதுபதி நன்றாக செய்கிறாரே என நினைத்திருந்தால் மாஸ்டரில் நான் காணாமல் போயிருப்பேன் என விஜய்சேதுபதி உருக்கமாக பேசியுள்ளார்