»   »  இதயம் முரளியில் ஹன்சிகா உடன் மீண்டும் இணைந்த உதயநிதி

இதயம் முரளியில் ஹன்சிகா உடன் மீண்டும் இணைந்த உதயநிதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

உதயநிதி ஸ்டாலினின் முதல் படத்தில் ஜோடியாக நடித்த ஹன்சிகா, அவரின் 5வது படமான இதயம் முரளி படத்தில் மீண்டும் ஜோடியாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இதனை உதயநிதி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

எத்தனை நாளைக்குதான் சினிமா தயாரிப்பாளராகவே இருப்பது. நாமளும் ஹீரோயின்களுடன் டூயட் பாடவேண்டுமானால் ஹீரோவாக நடிக்க வேண்டியதுதான் என்று உதயநிதி ஸ்டாலின் யோசித்ததன் விளைவு ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தில் ஹீரோவானார்.

ஹீரோ உதயநிதி

ஹீரோ உதயநிதி

ராஜேஷ் இயக்கிய இந்தப்படத்தில் உதயநிதியுடன் ஜோடி சேர்ந்தார் ஹன்சிகா. இப்படம் சூப்பர் ஹிட்டடிக்க, ரசிகர்களின் ஆதரவுடன் இது கதிர்வேலன் காதல், நண்பேண்டா என தொடர்ந்து நடித்து வருகிறார்.

நயன்தாரா ஜோடியாக

நயன்தாரா ஜோடியாக

இரண்டு படங்களில் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரையும் இணைத்து சிலபல கிசுகிசுக்கள் வெளியானது. ஆனாலும் அந்தப் படங்கள் சரியாக போகவில்லை

எமி ஜாக்சன் ஜோடி

எமி ஜாக்சன் ஜோடி

தமிழ் சினிமாவில் தன்னுடைய ஹீரோ அந்தஸ்தை தக்க வைக்க ‘கெத்து' படத்தில் நடித்து வருகிறார். இதில் உதயநிதிக்கு எமி ஜாக்சன் ஜோடி சேர்ந்துள்ளார்.

வில்லனாக விக்ராந்த்

வில்லனாக விக்ராந்த்

‘கெத்து' படத்தில் இவர்களுடன் சத்யராஜ், கருணாகரன் நடிக்கின்றனர். வில்லனாக விக்ராந்த நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க ‘மான் கராத்தே' திருக்குமரன் இயக்கி வருகிறார்.

ஹன்சிகா ஜோடி

ஹன்சிகா ஜோடி

தனது 5வது படமான இதயம் முரளியில் ஹன்சிகாவை ஜோடி சேர்த்துள்ளார். இதனை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் உதயநிதி.

பிரகாஷ் ராஜ் - ராதாரவி

‘என்றென்றும் புன்னகை' புகழ் அஹ்மத் இயக்கும் ‘இதயம் முரளி' படத்தில் பிரகாஷ்ராஜ், ராதாரவி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க மதி ஒளிப்பதிவு செய்வதாகவும் தெரிவித்துள்ளார் உதயநிதி.

ரொமான்ஸ் ஆக்சன்

கெத்து ஆக்சன் கதை என்றால் இதயம் முரளி மென்மையான காதல் கதையாக இருக்கும் என்கின்றனர் உதயநிதிக்கு ஆக்சன் செட் ஆகுமா? காதல் செட் ஆகுமா? பார்க்கலாம். எது செட் ஆனாலும் கிசுகிசு வராமல் இருந்தால் சரிதான் என்கின்றனர் உதயநிதியின் ரசிகர்கள்.

English summary
Sources said, Udhay has signed to play lead roles in other two projects, Gethu and Idhayam Murali. According to reports, Udhay play opposite to Hansika again in the film Idhayam Murali, after ‘OK OK’, which also had Hansika and Udhay in lead roles.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil