»   »  இது நம்ம ஆளு vs மருது: விஷாலுடன் நேரடியாக மோதும் சிம்பு

இது நம்ம ஆளு vs மருது: விஷாலுடன் நேரடியாக மோதும் சிம்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஷாலின் 'மருது', சிம்புவின் 'இது நம்ம ஆளு' 2 படங்களும் மே 20 ம் தேதி வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2 படங்களும் ஒரே நாளில் வெளியாவதன் மூலம் விஷால், சிம்பு நேரடியாக மோதும் சூழல் தற்போது உருவாகியுள்ளது.


'மருது', 'இது நம்ம ஆளு' படங்களின் பலம், பலவீனம் குறித்து இங்கே பார்க்கலாம்.


இது நம்ம ஆளு

இது நம்ம ஆளு

சிம்பு,நயன்தாரா, ஆண்ட்ரியா, சூரி, சந்தானம் என்று முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'இது நம்ம ஆளு'. இந்த ஆண்டில் மட்டும் பொங்கல், காதலர் தினம், ஹோலி என ஏகப்பட்ட வெளியீட்டுத் தேதிகளை இப்படம் சந்தித்து விட்டது. இந்நிலையில் வருகின்ற மே 20 ம் தேதி இப்படம் வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


பாண்டிராஜ்

பாண்டிராஜ்

பாண்டிராஜ் இயக்கம், சிம்பு-நயன்தாரா கெமிஸ்ட்ரி, சூரி காமெடி ஆகியவை இப்படத்திற்கு பெரும்பலமாக அமைந்துள்ளது. அதனால் தான் 3 வருடங்கள் கடந்தும் கூட இப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு இன்னும் குறையவில்லை. அதே நேரம் வெளியீட்டுத்தேதியை படக்குழு இன்னும் உறுதி செய்யவில்லை என்பது படத்திற்கு பலவீனமாக மாறியுள்ளது. குறளரசனின் இசை இப்படத்திற்கு எந்தளவு உதவியாக இருக்கும் என்பதும் தெரியவில்லை.


மருது

மருது

'குட்டிப்புலி', 'கொம்பன்' படங்களைத் தொடர்ந்து முத்தையா இயக்கியிருக்கும் படம் 'மருது'.விஷால், ஸ்ரீதிவ்யா, சூரி, ராதாரவி, ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. வழக்கம்போல கிராமத்துப் பின்னணியில் இப்படத்தை முத்தையா இயக்கியிருக்கிறார். படத்தை வாங்கியிருக்கும் ஐங்கரன் நிறுவனம் மே 20 ம் தேதி இப்படத்தை வெளியிடவிருப்பதாக கூறப்படுகிறது.


ராதராவி

ராதராவி

நடிகர் சங்கத் தேர்தலுக்குப்பின் ராதாரவி-விஷால் இணைந்து நடித்திருப்பது, டி.இமானின் இசை ஆகியவை இப்படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. கிராமத்துப் பின்னணியிலான கதையென்பதால் 'சண்டக்கோழி' போல இப்படமும் விஷாலுக்கு ஹிட்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


விஷால் vs சிம்பு

விஷால் vs சிம்பு

'கதகளி', 'இது நம்ம ஆளு' 2 படங்களையும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கியதால் பொங்கல் ரேஸில் சிம்பு, விஷால் மோதல் தவிர்க்கப்பட்டது. தற்போது மீண்டும் இருவரும் மோதிக்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


English summary
Sources Said Vishal's Marudhu Clash with Simbu's Idhu Namma Aalu on May 20th.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil