»   »  பாண்டிராஜும் புதிய "கூட்டணி"யை அமைத்தார்...!

பாண்டிராஜும் புதிய "கூட்டணி"யை அமைத்தார்...!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இது நம்ம ஆளு படம் தொடர்பான ஒரு வீடியோவை வெளியிட்டு, சத்தியமா சீக்கிரம் வர்றோம் என்று கூறியிருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.

சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா, ஜெய் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் இது நம்ம ஆளு. 3 ஆண்டுகளாக நீண்ட இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது.


ஏற்கனவே இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. ஆனால் படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.வருகின்ற ஏப்ரல் மாதம் இப்படம் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இயக்குநர் பாண்டிராஜ் இப்படம் தொடர்பான சிறு வீடியோ ஒன்றை வெளியிட்டு, 'சத்தியமா சீக்கிரம் வர்றோம்' என்று கூறியிருக்கிறார்.


பாண்டிராஜின் இந்த வீடியோ மூலம் படத்தின் வெளியீட்டுத் தேதியை விரைவில் அறிவிப்பார்கள் எனத் தெரிகிறது.


சீக்கிரம் வாங்கப்பா...


English summary
Director Pandiraj Tweeted " Idhu Namma Aalu Coming Soon".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil