»   »  'இது நம்ம ஆளு'வில் ஓபனிங் பாடல் இல்லாமல் நடித்தது புதிய அனுபவம் - சிம்பு

'இது நம்ம ஆளு'வில் ஓபனிங் பாடல் இல்லாமல் நடித்தது புதிய அனுபவம் - சிம்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சண்டைக்காட்சி, ஓபனிங் பாடல் இல்லாமல் 'இது நம்ம ஆளு' படத்தில் நடித்தது புதிய அனுபவம் என நடிகர் சிம்பு கூறியிருக்கிறார்.

சிம்பு, நயன்தாரா, சூரி நடிப்பில் உருவாகியிருக்கும் 'இது நம்ம ஆளு' நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது.


டி.ராஜேந்தர்-பாண்டிராஜ் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்துக்கு சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைத்துள்ளார்.


தடங்கல்கள்

தடங்கல்கள்

பல்வேறு தடைகளைத் தாண்டி 'இது நம்ம ஆளு' நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. காதல் முறிவிற்குப் பின் சிம்பு-நயன்தாரா முதன்முறையாக இணைந்து இப்படத்தில் நடித்துள்ளனர். பாண்டிராஜின் முதல் நகரத்துக் காதல் கதையாக 'இது நம்ம ஆளு' உருவாகி இருக்கிறது. இந்நிலையில் இப்படம் குறித்த சில விஷயங்களை நடிகர் சிம்பு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.


சண்டைக்காட்சி

சண்டைக்காட்சி

இப்படம் குறித்து சிம்பு '' சண்டைக்காட்சி, ஓபனிங் பாட்டு இல்லாமல் முதன்முறையாக இப்படத்தில் நடித்திருக்கிறேன். இதுபோன்ற கதையில் நடிப்பது என்னைப் பொறுத்தவரையில் ரிஸ்க்கான ஒரு விஷயம் தான். எனினும் இப்படத்தின் கதை எனக்குப் பிடித்ததால் இவ்வாறு நடிக்க ஒத்துக் கொண்டேன்.


படத்தின் கதை

படத்தின் கதை

இப்படத்தின் கதை ரசிகர்களுக்கு எளிதில் புரியும்படி இருக்கும். குறிப்பாக எனக்கும், நயன்தாராவுக்கும் இடையிலான உரையாடல்கள் ஒவ்வொரு இளம் தம்பதிகளின் வாழ்வையும் பிரதிபலிக்கும். இதுபோன்ற கதையில் ஒரு புதுமுகம் நடித்தால் கூட படம் ஓடும். எனினும் ஒரு நட்சத்திரம் நடித்தால் நன்றாக இருக்கும் என்பதால் நான் நடித்தேன்.


குறளரசன்

குறளரசன்

நான் மற்ற இசையமைப்பாளர்களுடன் வேலை செய்யும்போது அவர்கள் அருகே இருந்து, எனக்குப் பிடித்த மாதிரியான பாடல்களை வாங்கி விடுவேன். அதுபோல எனக்கு என்ன பிடிக்கும் என்பது குறளுக்குத் தெரியும் என்பதால், அதற்கேற்ற மாதிரியான பாடல்களையே கொடுத்திருக்கிறார். நான் மீண்டும் ஒரு படத்தில் குறளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.


ஆன்மீகம்

ஆன்மீகம்

தற்போது ஆன்மீகம் மீது எனக்கு ஈடுபாடு வந்திருக்கிறது. என்னைப் பற்றிய பல கேள்விகளுக்கான விடையை ஆன்மீகத்தின் மூலம் தெரிந்து கொண்டேன்'' என்று கூறியிருக்கிறார்.


'இது நம்ம ஆளு' படத்திற்குப் பின் கோடை விடுமுறையைக் கழிக்க சிம்பு வெளிநாடு செல்கிறார். அவர் திரும்பி வந்தவுடன் 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English summary
'Idhu Namma Aalu has no Fight Scene and no Introduction Song' Simbu says in Recent Interview.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil