»   »  இது நம்ம ஆளு நிச்சயம் வரும்... சிம்பு, நயன் மீண்டும் இணைவார்கள்... பாண்டிராஜ் உறுதி

இது நம்ம ஆளு நிச்சயம் வரும்... சிம்பு, நயன் மீண்டும் இணைவார்கள்... பாண்டிராஜ் உறுதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இது நம்ம ஆளு படம் பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் மாதத் தொடக்கத்தில் ரிலீசாகும் என அதன் இயக்குநர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.

திரையைப் போலவே நிஜ வாழ்க்கையிலும் காதலர்களாக வலம் வந்தவர்கள் சிம்பு- நயன்தாரா ஜோடி. ஆனால், இடையில் அவர்களது காதல் முறிந்து போனது.


அதனைத் தொடர்ந்து மீண்டும் அந்த ஜோடி திரையில் இணையவே இணையாது என ரசிகர்கள் நினைத்து வந்தனர். ஆனால், அந்தக் கருத்தை முறியடித்து மீண்டும் அவர்களை ஜோடி சேர்த்து இது நம்ம ஆளு என்ற படத்தை இயக்கியுள்ளார் பாண்டிராஜ்.


பின்னணி இசை...

பின்னணி இசை...

தற்போது அப்படத்தின் பின்னணி இசைக் கோர்ப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பல்வேறு காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க்கொண்டுள்ளது.
நிச்சயம் ரிலீஸ் ஆகும்...

நிச்சயம் ரிலீஸ் ஆகும்...

இந்நிலையில், பசங்க 2 மற்றும் கதகளி படம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்தார் இயக்குநர் பாண்டிராஜ். அப்போது அவர், ‘நிச்சயம் இது நம்ம ஆளு படம் ரிலீசாகும்' என உறுதிபடத் தெரிவித்துள்ளார்.


புரொமோஷன் விழாக்களில்...

புரொமோஷன் விழாக்களில்...

அடுத்த மாத இறுதியில் அல்லது மார்ச் மாதத் தொடக்கத்தில் அப்படம் ரிலீசாகும் எனக் கூறிய பாண்டிராஜ், அப்படத்தின் புரொமோஷன் விழாக்களில் சிம்புவும், நயன்தாராவும் இணைந்து கலந்து கொள்வார்கள் என்றார்.
தவறு எங்கள் மீது தான்...

தவறு எங்கள் மீது தான்...

மேலும், ‘ஏற்கெனவே, நயன்தாரா இந்த படத்துக்காக நிறைய நாட்கள் ஒதுக்கியிருந்தார். நாங்கள்தான் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டோம். இருப்பினும் புரோமோஷனுக்கு கண்டிப்பாக வருவார்' என அவர் தெரிவித்தார்.


மீதமுள்ள பாடல்...

மீதமுள்ள பாடல்...

இது நம்ம ஆளு படத்தில் இன்னும் ஒரு பாடல் வேறு எடுக்க வேண்டி இருப்பதாகவும், அதனாலேயே பட ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.


English summary
Director Pandiraj says, “Idhu Namma Aalu is definitely release. Simbu and Nayanthara will oblige to promote the film; after all I broke the challenge of casting them”.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil