»   »  'சிம்பு-நயன் கெமிஸ்ட்ரி சும்மா அள்ளுது'... இது நம்ம ஆளுவைப் பாராட்டும் ரசிகர்கள்

'சிம்பு-நயன் கெமிஸ்ட்ரி சும்மா அள்ளுது'... இது நம்ம ஆளுவைப் பாராட்டும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 'இது நம்ம ஆளு' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

பாண்டிராஜ் இயக்கம், சிம்பு-நயன் கெமிஸ்ட்ரி போன்ற காரணங்களால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது.


பல்வேறு தடைகளைத் தாண்டி வெளியான இது நம்ம ஆளு ரசிகர்களைக் கவர்ந்ததா? என்று பார்க்கலாம்.


சண்டைக் காட்சி

'சண்டைக் காட்சி இல்லாவிட்டாலும் இது நம்ம ஆளு படம் நன்றாக இருக்கிறது. சிம்பு நாயகனாக ஜெயித்து விட்டார்' என்று ராஜேஷ் பாராட்டியிருக்கிறார்.


சிம்பு-நயன்

'சிம்பு-நயன் கெமிஸ்ட்ரி சூப்பர். மொத்தத்தில் இது நம்ம ஆளு நன்றாக இருக்கிறது' என விஜேஷ் கூறியிருக்கிறார்.


சிம்பு-சூரி

'சிம்பு-சூரி காமெடியும், சுவாரசியமான திரைக்கதையும் சூப்பர்' என ஜோஷ் மனமாரப் பாராட்டியிருக்கிறார்.


கண்ணாமூச்சி ரே ரே

'கண்ணாமூச்சி ரே ரே' அஜீத் ரெபரன்ஸ் படத்தில் இருப்பதை சுட்டிக்காட்டி மகிழ்ந்திருக்கிறார் அஜித்சதா.


ஜாலியா

'இது நம்ம ஆளு முதல் பாதி ஜாலியா இருக்கு. குறிப்பா சூரி-சிம்பு காமெடி சூப்பர்' என்று மகிழ்ச்சியுடன் ஹரி திவாகர் கூறியிருக்கிறார்.


மொத்தத்தில் 'இது நம்ம ஆளு' நன்றாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற மேலும் பல ரசிகர்களின் பதிவுகளால் #idhunammaaalu ஹெஷ்டேக் தற்போது தேசிய அளவில் ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.English summary
Simbu-Nayanthara Starrer Idhu Namma Aalu Released today Worldwide.Written and Directed by Pandiraj - Live Audience Response.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil