»   »  இணையத்தில் வெளியான இது நம்ம ஆளு..கமிஷனர் அலுவலகத்தில் தயாரிப்பாளர் டி.ராஜேந்தர் புகார்

இணையத்தில் வெளியான இது நம்ம ஆளு..கமிஷனர் அலுவலகத்தில் தயாரிப்பாளர் டி.ராஜேந்தர் புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இது நம்ம ஆளு திரைப்படம் இணையதளங்களில் வெளியானதாக, படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான டி.ராஜேந்தர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.

சிம்பு-நயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் வெளியான இது நம்ம ஆளு திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.


Idhu Namma Aalu Piracy Issue

லேட்டாக வந்தாலும் படம் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.இந்நிலையில் இது நம்ம ஆளு இணையத்தில் வெளியாகி படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இது தொடர்பாக டி.ராஜேந்தர் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில் ''எங்கள் நிறுவனம் பலகோடி ரூபாய் செலவு செய்து இது நம்ம ஆளு படத்தை தயாரித்தது.


பல பேர் இரவும் பகலுமாக உழைத்து இது நம்ம ஆளுவை உருவாக்கினர். எனது மகன் சிலம்பரசன் நடிப்பில் கடந்த 27ம் தேதி இப்படம் வெளியானது.


Idhu Namma Aalu Piracy Issue

ஆனால் படம் வெளியான அடுத்த நாளே இணையத்தில் இப்படம் வெளியாகி விட்டது. தயவு செய்து இதனைத் தடுத்து நிறுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.இதனைத் தடுத்து நிறுத்தாவிடில் எனக்கு பலகோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும்'' என்று கூறியிருக்கிறார்.


இப்படத்தை இணையத்தில் வெளியிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்ட டி.ராஜேந்தர் படம் வெளியான இணையதளங்களின் பட்டியலையும் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்திருக்கிறார்.


English summary
Idhu Namma Aalu Piracy Issue: T.Rajendar Complaint in Commissioner Office.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil