»   »  அனுமார் வாலாக நீளும் 'இது நம்ம ஆளு'.. மீண்டும் தள்ளிப் போனது

அனுமார் வாலாக நீளும் 'இது நம்ம ஆளு'.. மீண்டும் தள்ளிப் போனது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிம்பு-நயன்தாராவின் 'இது நம்ம ஆளு 'வெளியீட்டுத் தேதி மீண்டும் தள்ளிப் போயிருக்கிறது.

பாண்டிராஜின் பசங்க புரொடக்ஷன்ஸ் மற்றும் டி.ராஜேந்தரின் சிம்பு சினி ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'இது நம்ம ஆளு'.

3 வருடமானாலும் சிம்பு-நயனின் கெமிஸ்ட்ரிக்காக துளியும் ஆர்வம் குறையாமல் ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில் மே 20ம் தேதி இது நம்ம ஆளு' படம் வெளியாகும் என இயக்குநர் பாண்டிராஜ் அறிவித்தார்.

Idhu Namma Aalu Release Again Postponed

இதனைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் நாம் எதிர்பார்த்திருந்த அந்த வரலாற்றுத் தினம் வந்தே விட்டது என சந்தோஷத்தில் திளைக்க ஆரம்பித்தனர்.

விஷாலின் 'மருது'வுடன், 'இது நம்ம ஆளு' மோதும் என உறுதியாக படக்குழு சார்பில் அறிவித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் 'இது நம்ம ஆளு' தள்ளிப் போயிருக்கிறது.

தற்போது வந்த தகவலின்படி மே 27ம் தேதி இப்படம் வெளியாகும் என உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதவிர தமிழக அரசின் வரிச்சலுகையும் இப்படத்திற்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

20ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இப்படம் தள்ளிப்போன காரணம் விஷாலின் 'மருது' என ஒருபுறமும், மற்றொருபுறம் வரிச்சலுகை கிடைக்காததால் இப்படம் தள்ளிப் போனதாகவும் கூறுகின்றனர்.

20 ம் தேதி நிச்சயம் வர்றோம்னு சத்தியம் பண்ணி சொன்னீங்களே பாண்டிராஜ்!

English summary
Simbu-Nayanthara Starrer Idhu Namma Aalu Release date Again Postponed.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil