»   »  சிம்புவின் இது நம்ம ஆளு தள்ளிப்போக விஷால் காரணமா?

சிம்புவின் இது நம்ம ஆளு தள்ளிப்போக விஷால் காரணமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிம்பு-நயன்தாரா நடிப்பில் உருவான இது நம்ம ஆளு திரைப்படத்தை அடுத்த வருடம் காதலர் தினத்தில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர்.

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருக்கும் இப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று உறுதியான தகவல்கள் வெளியான நிலையில் தற்போது படம் காதலர் தினத்திற்கு தள்ளிப் போயிருக்கிறது.

இந்நிலையில் சிம்புவின் இது நம்ம ஆளு மீண்டும் தள்ளிப்போக விஷாலின் கதகளி திரைப்படமும் ஒரு காரணமாகி இருக்கிறது.

இது நம்ம ஆளு

இது நம்ம ஆளு

சிம்பு, நயன்தாரா, சூரி, ஆண்ட்ரியா மற்றும் சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் இது நம்ம ஆளு. சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு குறளரசன் இசையமைக்க சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் தயாரித்து இருக்கிறார்.

பலமுறை

பலமுறை

பலமுறை ரிலீஸ் தேதியை அறிவித்தும் படத்தை வெளியிட முடியவில்லை. மேலும் படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் மற்றும் சிம்பு குடும்பத்தினரிடையே இந்தப் படத்தினால் மோதல்களும் எழுந்தன.இந்நிலையில் படத்தை வரும் பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருந்தனர்.ஆனால் மீண்டும் ஒருமுறை இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போயிருக்கிறது.

காதலர் தினம்

தற்போது காதலர் தினத்தில் இப்படத்தை வெளியிட படத்தை வாங்கியிருக்கும் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது இதனைப் படத்தின் இயக்குநர் பாண்டிராஜும் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்திருக்கிறார்.

காரணம் என்ன

காரணம் என்ன

ஏற்கனவே சுந்தர்.சியின் அரண்மனை 2 மற்றும் விஷாலின் கதகளி ஆகிய படங்களின் வெளியீட்டு உரிமையை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. இதனால் இது நம்ம ஆளு படத்தை பொங்கல் தினத்தில் வெளியிடும் பட்சத்தில் இந்நிறுவனத்தின் 3 படங்கள் ஒரே நாளில் வெளியாகும். இதனை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் விரும்பவில்லை எனவே இது நம்ம ஆளு படத்தை காதலர் தினத்தில் வெளியிட இந்நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது.

விரைவில் பாடல்கள்

இது நம்ம ஆளு படத்தின் டப்பிங் பணிகள் தற்போது தொடங்கப்பட்டு உள்ளன. படத்தின் மற்ற பணிகள் மற்றும் பாடல் படப்பிடிப்பை விரைவில் துவங்க படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர். விரைவில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் ஆகியவை வெளியாகவிருக்கிறது.

English summary
Idhu Namma Aalu Heroine Nayanthara Wrote on Twitter "And yes, INA date locked..A special treat on Valentines Days.. Releases on Feb 14th #INAonValentinesDay".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil