»   »  மார்ச்சில் வெளியாகிறது சிம்பு- நயன்தாராவின் 'இது நம்ம ஆளு'

மார்ச்சில் வெளியாகிறது சிம்பு- நயன்தாராவின் 'இது நம்ம ஆளு'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிம்பு-நயன்தாரா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்து, கண்கள் பூத்திருந்த இது நம்ம ஆளு திரைப்படம் மார்ச் 24ல் வெளியாகும் என்று கூறுகின்றனர்.

சிம்பு, நயன்தாரா, சூரி, ஆன்ட்ரியா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் இது நம்ம ஆளு. பாண்டிராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தின் மூலம் சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்.


இந்தப் படத்தின் பாடல்களை வருகின்ற பிப்ரவரி 3 ம் தேதி சிம்புவின் பிறந்த நாளில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர்.


பாடல்கள் மற்றும் டிரெய்லர்

பாடல்கள் மற்றும் டிரெய்லர்

வருகின்ற பிப்ரவரி 3ம் தேதி நடிகர் சிம்பு தனது 33 வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார். இதனை முன்னிட்டு இது நம்ம ஆளு படத்தின் இசை மற்றும் பாடல்களை வெளியிட படக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி படத்தின் டிரெய்லர் ஒன்றையும் அதே நாளில் வெளியிடவிருப்பதாக கூறுகின்றனர்.
தேனாண்டாள் பிலிம்ஸ்

தேனாண்டாள் பிலிம்ஸ்

இது நம்ம ஆளு படத்தின் வெளியீட்டு உரிமையை முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கி இருக்கிறது. வழக்கமாக பேய்ப்படங்களை நம்பும் இந்நிறுவனம் சிம்பு-நயன் கெமிஸ்ட்ரி, பாண்டிராஜ் இயக்கம் ஆகியவற்றின் மீதுள்ள நம்பிக்கையால் ஒரு பெரிய தொகையை கொடுத்து இது நம்ம ஆளு படத்தை கைப்பற்றி இருக்கிறது.


மார்ச் 24

மார்ச் 24

தற்போதைய நிலவரத்தின்படி வருகின்ற மார்ச் 24ம் தேதி இப்படத்தை வெளியிட தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளதாம். வரிசையாக பிரசாந்தின் சாஹசம் மற்றும் வேறு படங்களை வாங்கி வைத்திருப்பதால் தான் மார்ச்சிற்கு இப்படம் தள்ளிப் போனதாம்.


விஜய், சூர்யா

விஜய், சூர்யா

ஏப்ரல் மாதம் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விஜய்யின் தெறி, சூர்யாவின் 24 ஆகிய படங்கள் வெளியாகும் என்பதால் முன்னதாக வந்து ரசிகர்களைக் கவரலாம் என்பது இவர்களின் திட்டமாக உள்ளது. எனினும் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான வெளியீட்டுத் தேதியை இந்நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


நீண்ட நாள்

நீண்ட நாள்

வாலு படத்திற்குப் பின் நீண்ட நாட்கள் கழித்து இப்படம் வெளியாகவிருப்பது சிம்பு ரசிகர்களிடையே மகிழ்ச்சியை அதிகமாக்கி இருக்கிறது. காதல் முறிவிற்குப் பின் சிம்பு-நயன் நடித்திருப்பதால் இளைஞர்களிடம் இப்படம் அதிகப்படியான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


English summary
Sources Said Simbu-Nayanthara Starrer Idhu Namma Aalu Released on March 24 for Worldwide.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil