»   »  "ஒற்றைக்காலில்" நின்று இது நம்ம ஆளு படப்பிடிப்பை முடித்த சிம்பு

"ஒற்றைக்காலில்" நின்று இது நம்ம ஆளு படப்பிடிப்பை முடித்த சிம்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிம்புவின் நடிப்பில் 3 வருடங்களாக நீண்ட இது நம்ம ஆளு படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவுக்கு வந்திருக்கிறது.

கடந்த 2013 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட படம் இது நம்ம ஆளு. பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடிக்கப் போவதாக வெளியான செய்திகளைக் கண்டு ஒட்டுமொத்த கோலிவுட்டும் அரண்டுபோய் நின்றது.


Idhu Namma Aalu Shooting Wrapped Up

மிகவும் ஆராவாரமாக துவங்கப்பட்ட இப்படத்தை போகப்போக ஏன் ஆரம்பித்தோம் என பாண்டிராஜ் நொந்து போக ஆரம்பித்தார்.


Idhu Namma Aalu Shooting Wrapped Up

நயன்தாரா கால்ஷீட் பிரச்சினை, குறளரசன்- பாண்டிராஜ் சண்டை, டி.ராஜேந்தர் புகார் என நாளொரு புகார் பொழுதொரு பிரச்சினையில் சிக்கிய இப்படம், ஒருவழியாக இன்று முடிவுக்கு வந்துள்ளது.


நயன்தாரா ஒப்புக் கொள்ளாததால் அடா சர்மாவை முன்னாள் காதலியாக நடிக்க வைத்து, மாமன் வெய்ட்டிங் என்ற குத்துப் பாடலை இயக்கியுள்ளனர்.


Idhu Namma Aalu Shooting Wrapped Up

இப்பாடலில் 70 நொடிகள் சிம்பு ஒற்றைக்காலில் நின்று நடனம் ஆடியது, கோலிவுட்டில் ஆச்சரிய அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.


இது நம்ம ஆளு படப்பிடிப்பு மற்றும் புதிய படத்தின் பூஜை என்று மறக்க முடியாத நாளாக, இன்றைய தினம் சிம்புவுக்கு அமைந்திருக்கிறது.


இதே வேகத்தில் படங்களும் வெளியாகுமா? பார்க்கலாம்.

English summary
Simbu, Nayanthara Starrer Idhu Namma Aalu Shooting Finally Wrapped up Today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil