»   »  என்ன சிம்பு-நயன்தாரா கல்யாணம் பண்ணிட்டாங்களா?.. அப்டியே 'ஷாக்' ஆன ரசிகர்கள்!

என்ன சிம்பு-நயன்தாரா கல்யாணம் பண்ணிட்டாங்களா?.. அப்டியே 'ஷாக்' ஆன ரசிகர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிம்பு-நயன்தாரா இருவரும் மாலையும், கழுத்துமாக நிற்பது போன்ற ஒரு போஸ்டர் சென்னை மாநகரம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

முன்னாள் காதலர்கள் சிம்பு, நயன்தாரா மீண்டும் இணைந்து நடித்திருக்கும் படம் இது நம்ம ஆளு. பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் அடுத்த மாதம் வெளியாகிறது.


இந்நிலையில் இன்று சென்னை முழுவதும் சிம்பு-நயன்தாரா மாலையும், கழுத்துமாக நிற்பது போன்ற ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தொலைவில் இருந்து பார்க்கும் யாரும் என்னது ரெண்டு பேருக்கும் கல்யாணமாயிடுச்சா? என்று கேட்டு ஷாக்காகினர். பின்னர் அருகில் சென்று பார்த்தபோது அது இது நம்ம ஆளு படத்தின் போஸ்டர் என்று தெரிந்த பின்னர் தான் பலரின் பதட்டமும் குறைந்தது.


திருமண வரவேற்பில் சிம்புவும், நயன்தாராவும் நிற்பது போன்ற இந்தப் போஸ்டரை சென்னை முழுவதும் ஒட்டி காதலர் தின வாழ்த்துக்களை படக்குழு தெரிவித்துள்ளது.


இதுபோன்று சிம்பு-நயன்தாரா திருமணம் செய்து கொள்வது போன்ற ஒரு புகைப்படத்தை படக்குழுவினர் ஏற்கனவே வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


எத்தனை நாளைக்கு தான் போஸ்டரை மட்டும் பாக்குறது...சீக்கிரம் படத்தை கண்ணுல காட்டுங்கப்பா.


English summary
Idhu Namma Aalu: Simbu-Nayanthara Wedding Photo Caused a Stir Across in Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil