அன்புவின் எழுச்சி தான் எல்லாமே.. Haters-க்கு தனுஷ் கொடுத்த நச் ரிப்ளை.. ஆட்டோ பின்னாடியே எழுதலாமே!
சென்னை: இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற்று விட்டது. குறிப்பாக படத்தின் நாயகன், இயக்குநர் தனுஷ் பேச்சு, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமாரின் பேச்சு, தனுஷின் மேனேஜர் ஸ்ரேயஸின் பேச்சு உள்ளிட்டவை எல்லாம் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று விட்டது. இதில் தனுஷ் பேசிய போது ஹேட்டர்ஸ் குறித்து பேசினார்.
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய டிடி, ஹேட்டர்ஸ் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, " ஹேட்டர்ஸ் எனும் கான்செப்ட்டே இல்லை என்று நினைக்கிறேன். அப்படி யாருமே இல்லை. எல்லோரும் எல்லார் படமும் பார்ப்பார்கள். இங்கு யார் ஹேட்டர்ஸ் என்று சொல்லுங்க பார்க்கலாம்?. ஒரு குறிப்பிட்ட ஒரு குரூப் அவர்களின் வாழ்வாதரத்திற்காகவோ ஏதோ ஒன்றுக்காகவோ, 30 பேர் 300 இணையதள கணக்குகளை வைத்துக் கொண்டு பரப்புவதுதான் வெறுப்பு.
ஹேட்டர்ஸ்: அதெல்லாம் ஒன்னுமே இல்லை. அந்த 30 பேரும் போய் படம் பார்ப்பார்கள். ஹேட்டர்ஸ் என்ற கான்செப்ட்டே கிடையாது. ஆனால் கள நிலவரமே வேறு, நம்ம பசங்க ( ரசிகர்கள்) களத்தில் இறங்கி வேற லெவலில் இருப்பார்கள். நாம் எப்போதும் சொல்வதுதான் நமக்கு அன்பு தருகிறார்களா? அன்பையே திருப்பிக் கொடுப்போம். வெறுப்பு தருகிறார்களா அவர்களுக்கும் அன்பையே திருப்பிக் கொடுப்போம். அன்புவின் எழுச்சிதான் எல்லாமே! என்று பேசியுள்ளார். இவரது இந்த பேச்சை கேட்ட பின்னர், ரசிகர்கள் தொடங்கி இணையவாசிகள் என பலரும் தனுஷ் ரியாலிட்டியை, எதார்த்தத்தை பேசி உள்ளார். இன்னும் சொல்லப்போனால் ஆட்டோ பின்னாடி எழுதுவதற்கு ஏற்றது போல நச்சென பேசி உள்ளார் என்று கூறி வருகிறார்கள்.

முதுகில் குத்தமாட்டேன்: அவருக்கு முன்னதாக பேசிய ஜி.வி. பிரகாஷ் குமார் பேச்சுக்கும் தனி வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்தது. அதாவது, " எனக்கும் தனுஷ் இயக்கத்தில் நடிக்க ஆசை உள்ளது. தனுஷ் இயக்கினால் 'துள்ளுவதோ இளைமை 2'-ல் நான் நடிக்க ரெடி; ஆனால், அவருக்கு துரோகம் செய்யும் கதையில் நான் நடிக்க மாட்டேன். அதனால் தான் ராயனில் நடிக்க மறுத்துவிட்டேன். அந்த நாலுபேர் ஒருவனாக நான் இருக்க மாட்டேன்" என்று பேசியிருந்தார்.
மோதி பார்க்க ரெடியா?: அதேபோல் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தனுஷின் மேனேஜர் ஸ்ரேயஸ் பேசும்போது தனுஷ்க்கு அறிவுரையே வழங்கினார் என்று கூறலாம். அதாவது, " ஃபேமஸ் ஆக இரண்டு வழிகள் உள்ளது. ஒன்று உழைத்து ரத்தம் சிந்தி உயரத்திற்குச் செல்வது. இரண்டாவது உயரத்தில் இருப்பவரை அடிப்பது. தனுஷ் சினிமாவில் வளர்த்துவிட்டவர்களே, கொஞ்சம் வளர்ந்த பின்னர் அவரை அடிக்கிறார்கள். நேருக்கு நேர் நடித்து மோதினால் ஓ.கே. தனுஷ் சார் நல்லவனாக இருங்க. அதுக்குன்னு ரொம்ப நல்லவனா இருக்காதீங்க" என்று பேசினார்.


Click it and Unblock the Notifications











