அந்த நாலு பேரு மாதிரி நான் தனுஷ் முதுகில் குத்த மாட்டேன்.. GV பிரகாஷ் குமார் பளிச்னு சொல்லிட்டாரே!

சென்னை: தனுஷ் இயக்கி தயாரித்து நடித்துள்ள படமான இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் சார்பில் ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி உள்ளது. இப்படி இருக்கும்போது இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் பேசுகையில் தனுஷ் குறித்தும் அவருக்கும் தனுஷ்க்கும் இடையிலான நட்பு குறித்து பேசினார்.

அதில் அவர் பேசுகையில், " எனக்கும் தனுஷ் இயக்கத்தில் நடிக்க ஆசை உள்ளது. தனுஷ் இயக்கினால் 'துள்ளுவதா இளைமை 2'-ல் நான் நடிக்க ரெடி; ஆனால், அவருக்கு துரோகம் செய்யும் கதையில் நான் நடிக்க மாட்டேன். அதனால் தான் ராயனில் நடிக்க மறுத்துவிட்டேன். அந்த நாலுபேர் ஒருவனாக நான் இருக்க மாட்டேன்" என்று பேசியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இப்படி பேசியதும் அரங்கத்தில் கூடி இருந்த தனுஷ் ரசிகர்கள் எழுப்பிய ஆரவாரம் என்பது உச்சத்தில் இருந்தது.

Idli Kadai Audio Launch GV Prakash Kumar Speech He Likes To Act Under Dhanush Direction

இது மட்டும் இல்லாமல் முன்னதாக ஒரு இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் நண்பன் என்பவன் ஜி.வி. பிரகாஷ் குமார் போல இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்த வீடியோவும் தற்போது மீண்டும் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

முன்னதாக பேசிய தனுஷின் மேனேஜர் ஸ்ரேயஸ் பேசியதும் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதாவது அவர் பேசுகையில், " "ஃபேமஸ் ஆக இரண்டு வழிகள் உள்ளது. ஒன்று உழைத்து ரத்தம் சிந்தி உயரத்திற்குச் செல்வது. இரண்டாவது உயரத்தில் இருப்பவரை அடிப்பது. தனுஷ் சினிமாவில் வளர்த்துவிட்டவர்களே, கொஞ்சம் வளர்ந்த பின்னர் அவரை அடிக்கிறார்கள். நேருக்கு நேர் நடித்து மோதினால் ஓ.கே. தனுஷ் சார் நல்லவனாக இருங்க. அதுக்குன்னு ரொம்ப நல்லவனா இருக்காதீங்க" என்று பேசியுள்ளார். ஸ்ரேயஸ் இவ்வாறு பேச பேச அங்கு கூடி இருந்த தனுஷ் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். இதனால் நேரு உள்விளையாட்டு அரங்கம் அதிரும் அளவுக்கு ஆர்ப்பரித்தனர். இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X