Vada Chennai 2: டவுட்டே வேண்டாம்.. அடுத்து வடசென்னை 2 தான்.. ஐசரி கணேஷ் உடச்சு பேசிட்டாரே!

சென்னை: நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள படம் இட்லி கடை. இந்த படம் வரும் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று அதாவது செப்டம்பர் 14ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பேசுகையில் தனுஷின் வட சென்னை படத்தின் இரண்டாம் பாகத்தை தான் தயாரிக்க உள்ளதாகவும். படத்தின் வேலைகள் விரைவில் தொடங்கும் என்றும் பேசினார். இது தனுஷ் ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

நடிகர் தனுஷ் கதை திரைக்கதை அமைத்து, டான் பிக்சர்ஸ் உடன் இணைந்து தயாரித்தது மட்டும் இல்லாமல் இயக்கி நடித்துள்ள படம் இட்லி கடை. இந்த படத்தில் சில பாடல்களையும் எழுதி உள்ள தனுஷ், சில பாடல்களையும் பாடியுள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரமாண்டமாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இப்படி இருக்கையில் இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் மட்டும் இல்லாமல், தனுஷ் தற்போது கமிட் ஆகி உள்ள படங்களின் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பல திரைக் கலைஞர்களும் கலந்து கொண்டுள்ளார்கள்.

Idli Kadai Audio Launch Ishari K Ganesh Officially Annouced Vada Chennai 2 With Dhanush And Vetri Maaran

வட சென்னை 2: இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தயாரிப்பாளரான ஐசரி கணேஷ் பேசுகையில் கடந்த சில ஆண்டுகளாக தனுஷ் ரசிகர்கள் மட்டும் இல்லாமல், வெற்றி மாறன் ரசிகர்கள், சினிமா ரசிகர்கள் மற்றும் வட சென்னை படத்தின் ரசிகர்கள் என பலரது எதிர்பார்ப்புக்கும் கேள்விக்கும் பதில் அளித்துள்ளார். அதாவது அவர் பேசும்போது, தனுஷ் சம்மதம் தெரிவித்துள்ளதால் இப்போது இதைக் கூறுகிறேன். மிக விரைவில் தனுஷ், வெற்றி மாறன் மற்றும் வேல்ஸ் நிறுவனம் இணைந்து வட சென்னை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளோம் " என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த அறிவிப்பைக் கேட்டதும் மொத்த ரசிகர்களும் ஆரவாரத்தில் ஆர்ப்பரித்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

சிம்பு கூட்டணி: தற்போது வெற்றி மாறன் வட சென்னை படத்தின் காலகட்டத்தின் சமகால கதை ஒன்றில் நடிகர் சிம்புவை வைத்து படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரித்து வருகிறார். கலைப்புலி தாணு இந்த படத்தை தயாரிப்பதால் இந்த படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு வழக்கத்தைக் கடந்து உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X