இட்லி கடையை சுத்தமா கழுவி வச்சிட்டாங்க.. தமிழ்நாட்டிலேயே தனுஷ் படம் டோட்டல் வாஷ் அவுட்?.. காந்தாரா?

சென்னை: தனுஷின் இட்லி கடை படம் கடந்த அக்டோபர் 1ம் தேதி வெளியானது. ஆயுத பூஜை, விஜயதசமி, சனி மற்றும் ஞாயிறு என மொத்தம் 4 விடுமுறை நாட்களுடன் கூடிய முதல் வாரத்தை டார்கெட் செய்து வெளியிட்ட திரைப்படம் கிராமத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், படம் ஓரளவுக்கு கல்லா கட்டியது.

ஆனால், மிகப்பெரிய வெற்றியை இட்லி கடை பெறவில்லை என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அதே சமயம் இட்லி கடை இந்த ஆண்டு தமிழ்நாட்டில் அதிக வசூல் பெற்ற 3வது படம் என்றெல்லாம் பில்டப் செய்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் கிளம்பி உள்ளன.

Idli Kadai Monday Ticket Booking status seems very dull but Kantara Chapter 1 picked well
Photo Credit:

தமிழ்நாட்டில் மட்டுமே 40 கோடி வசூலை இட்லி கடை பெற்றுள்ளதாகவும், உலகளவில் முதல் 5 நாட்களில் 50 கோடி வசூலை இட்லி கடை அள்ளியுள்ளதாக கூறுகின்றனர். இந்த சூழலில் திங்கட்கிழமையான இன்று இட்லி கடை புக் மை ஷோ டிக்கெட் புக்கிங்கில் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் டிராக்கர்கள் ஸ்க்ரீன் ஷாட்டுகளை போட்டு வருகின்றனர்.

Idli Kadai Monday Ticket Booking status seems very dull but Kantara Chapter 1 picked well
Photo Credit:

திங்கட்கிழமை காலியான இட்லி கடை: தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களின் படங்கள் முதல் வாரத்தை தாண்டி வார நாட்களில் ஓரளவுக்கு கூட திரையரங்குகளை நிறைக்க முடியாமல் தவித்து வருவது வாடிக்கையாகி வருகிறது. நடிகர் தனுஷுக்கு கடைசியான வெளியான குபேரா திரைப்படம் தமிழ்நாட்டில் வாஷ் அவுட் ஆன நிலையில், தெலுங்கிலாவது ஓடி 100 கோடி வசூலை ஈட்டியது. ஆனால், இட்லி கடை திரைப்படம் திங்கட்கிழமை டோட்டல் வாஷ் அவுட் ஆகிவிட்டதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை வெறும் 55 லட்சம் மட்டுமே இட்லி கடை திங்கட்கிழமை வசூல் செய்துள்ளதாக சாக்னிக் தெரிவித்துள்ளது. இரவு காட்சிகளில் வசூல் அதிகரிக்குமா என்பது சந்தேகம் தான் என்கின்றனர்.

Idli Kadai Monday Ticket Booking status seems very dull but Kantara Chapter 1 picked well
Photo Credit:

ஆரஞ்சு அலர்ட்டில் காந்தாரா சாப்டர் 1: மக்கள் பொதுவாக திங்கட்கிழமை புதிய படங்களை தியேட்டர்களுக்குச் சென்று பார்ப்பதில்லை என்று சில தனுஷ் ரசிகர்கள் முட்டுக் கொடுத்தாலும் நிலைமை வேற மாதிரி உள்ளது. காந்தாரா சாப்டர் 1 படம் வெளியான பல தியேட்டர்கள் ஆரஞ்சு அலர்ட்டில் 80 முதல் 90 சதவீதம் அரங்கு நிறைந்து தமிழ்நாட்டிலேயே காணப்படுவது தான் இதில் ஆச்சர்யமான விஷயமாக மாறியிருக்கிறது.

ரசிகர்களை குறை சொல்லக்கூடாது: கங்குவா, தக் லைஃப் உள்ளிட்ட படங்களை தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடவில்லை என குறை சொல்வதை விட்டுவிட்டு மக்கள் கொண்டாடும் அளவுக்கு படங்களை இயக்குநர்களும் நடிகர்களும் கொடுக்க தவறியதை ஒப்புக் கொண்டு விரைவில் அதுபோன்ற படங்களை கொடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X