Dhanush: தனுஷின் மொத்த உழைப்பையும் திருடிய செல்வராகவன்.. அட வம்பே.. இப்படியெல்லாம் நடந்திருக்கா?
மதுரை: நடிகர் தனுஷ் தற்போது தனது இட்லி கடை படத்தின் புரோமோசனில் செம பிஸியாக உள்ளார். இந்த படத்தின் கதையை அவரே எழுதி, திரைக்கதை அமைத்து, இயக்கி, நடித்தும் உள்ளார். இது மட்டும் இல்லாமல் டான் பிக்சர்ஸ் உடன் இணைந்து படத்தை தயாரித்தும் உள்ளார். இப்படி இருக்கும்போது படத்தின் புரோமோசன் மதுரையில் இன்று அதாவது செப்டம்பர் 24 ஆம் தேதி நடைபெற்றது. படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதால் படத்தின் புரோமோசன் வேலைகள் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது.
இப்படி இருக்கும்போது, மதுரையில் நடைபெற்ற புரோமோசன் நிகழ்ச்சியில், தனுஷிடம் அவரது படங்களில் இடம் பெற்ற வசனங்களை போட்டு அது அவரது சொந்த வாழ்வில் எங்கு பொருந்துகிறது என்று கேள்வி எழுப்பினர். அதில் மாரி படத்தில் வரும் சேட்டை புடிச்ச பையன் சார், சும்மா சும்மா எல்லாம் கலாய்ப்பான் என்ற வசனம் போடப்பட்டது. இதைக் கேட்டதும் சிரித்த தனுஷ் அதன் பின்னர் பேசத் தொடங்கினார்.
அதாவது அவர் பேசும்போது, " சின்ன வயதில் நான் கொஞ்சம் சேட்டை பிடித்த பையன் தான். ஆனால் என்னைவிட சேட்டை பிடித்தவர் செல்வராகவன். அவர் என்னை விட 8 வயது பெரியவர். அவர் ரொம்பவும் இன்ட்ரோவெர்ட். அப்படி இருக்கும் போதும் அவர் சேட்டை பிடித்த பையன். சின்ன வயதில் என்னை கிரிக்கெட் விளையாட கூட்டிச் செல்வார். எப்படியும் டாஸில் ஏமாற்றி அவர் முதலில் பேட்டிங் செய்வார்.

தனுஷ் பட்ட கொடுமை: நான் சுமார் 3 மணி நேரம் பந்து வீசுவேன். ரொம்பவும் கஷ்டப்பட்டு அவரை அவுட் ஆக்கினால், அவர் பேட்டை கீழே போட்டுவிட்டு ஓடிவிடுவார். பல நேரங்களில் நான் பேட்டிங்கே பிடித்ததில்லை. பவுலிங் மட்டுமே போட்டுள்ளேன். அதேபோல், சின்ன வயதில் ஐந்து பைசா, பத்து பைசா, இருபது பைசா என சேர்த்து வைப்பேன். அது நான்கு ரூபாயோ ஐந்து ரூபாயோ சேர்ந்தால் ஏதாவது வாங்கிச் சாப்பிடுவேன்.
செல்வராகவனின் திருட்டு: ஆனால் அந்த பணத்தை செல்வராகவன் எனக்குத் தெரியாமல் திருடிக் கொண்டு சென்று விடுவார். இந்த அண்ணன்களுக்கு எல்லாம் தம்பிகளை கொடுமை செய்வதில் என்னதான் அப்படி ஒரு சந்தோஷம் என்றே தெரியவில்லை" என்று பேசினார். அப்போது அங்கு கூடியிருந்த தனுஷ் ரசிகர்கள் கைதட்டித் சிரித்து ஆரவாரம் செய்தார்கள். மேலும் சில ரசிகர்கர்கள் செல்வராகன் இவ்வளவு கொடுமை செய்யும் அண்ணனாக சிறுவயதில் இருந்துள்ளாரே என்றும் கமெண்ட் போட்டு வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் தனுஷ் ஆடுகளம் படத்தில் பணியாற்றியபோது மதுரையில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
முருகர் வேல்: இட்லி கடை படம் வெளியாக இன்னும் ஒரு வார காலம் இருக்கும் பட்சத்தில் இன்று அதாவது செப்டம்பர் 24ஆம் தேதி அவர் மதுரைக்கு படத்தின் புரோமோசனுக்காக சென்றார். இதை அறிந்து கொண்ட அவரது ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது ரசிகர் ஒருவர் அவருக்கு வேல் கொடுத்தார். அதை தனுஷ் பெற்றுக் கொண்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











