twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “விவேக் சார் உயிரோட இருந்திருந்தா யார்கிட்டேயும் கை ஏந்த அவசியமே வந்திருக்காது”: உருகிய போண்டா மணி

    |

    சென்னை: தமிழ் சினிமாவில் ஏராளமான காமெடி காட்சிகளில் நடித்து புகழ் பெற்றவர் போண்டா மணி.

    மறைந்த காமெடி நடிகர் விவேக், வடிவேலு உள்ளிட்ட பல காமெடி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

    இந்நிலையில், இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ள போண்டா மணி ஓமந்துரார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

     ஆறு மணி ஆனதும் ஷூட்டிங்ல நான் போண்டா சாப்பிடுவேன்.. ஜோ சொன்ன ஷூட்டிங் ஸ்பாட் சம்பவம் ! ஆறு மணி ஆனதும் ஷூட்டிங்ல நான் போண்டா சாப்பிடுவேன்.. ஜோ சொன்ன ஷூட்டிங் ஸ்பாட் சம்பவம் !

    காமெடி என்டர்டெயினர்

    காமெடி என்டர்டெயினர்

    தமிழில் முன்னணி நகைச்சுவை நடிகர்களான விவேக், வடிவேலு ஆகியோருடன் ஏராளமான காமெடி காட்சிகளில் நடித்து புகழ் பெற்றவர் போண்டா மணி. சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்தாலும் தனது வித்தியாசமான உடல்மொழி, டயலாக் டெலிவரியால் ரசிகர்களை சிரிக்க வைத்து வேடிக்கை காட்டிய போண்டா மணி, தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு ஓமந்துரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    சாக்கடையில் இறங்கி நடிக்க சொன்னாங்க

    சாக்கடையில் இறங்கி நடிக்க சொன்னாங்க

    இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ளதால், போதிய வருமானம் இல்லாமல் தவித்து வரும் போண்டா மணி, சிகிச்சைகும் பணம் இல்லாமல் தவித்து வருகிறார். இதனால், சினிமா பிரபலங்களின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறார். இதுகுறித்து பேசியுள்ள அவர், "ஆறு மாதமாகவே உடல்நிலை சரியில்லை, அதனால் ஒப்புக்கொண்ட படங்களில் நடிக்கத் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருந்தேன். பருவக் காதல்னு ஒரு படத்தில் நடிச்சேன். அதில் சாக்கடையில் விழுகிற மாதிரி சீன் எடுத்தாங்க. தத்ரூபமாகத் தெரியணும்னு நிஜ சாக்கடையில் என்னை விழ வச்சிருக்காங்க. அந்த சாக்கடை தண்ணீர் உடம்புக்குள் போனதால நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டுச்சு" எனத் தெரிவித்துள்ளார்.

    சிறுநீரகங்கள் செயலிழப்பு

    சிறுநீரகங்கள் செயலிழப்பு

    மேலும், "அந்தப் படப்பிடிப்பு தளத்திலேயே மூச்சுத்திணறி மயக்கமானேன். தொடர்ந்து சிகிச்சை எடுத்துவிட்டு கமிட் ஆகிருந்த படங்களில் நடிப்பதற்காக பல ஊர்களுக்கு டிராவல் செய்தேன். அப்பப்ப மூச்சுத்திணறல் ஏற்பட்டுச்சு. ஓமந்தூரார் மருத்துவமனையில் நல்ல முறையில் சிகிச்சை பண்ணினாங்க. தொடர்ந்து மூச்சு விட சிரமப்பட்டுட்டே இருந்தேன். இப்ப சமீபத்தில் தான் ரெண்டு சிறுநீரகமும் செயலிழந்த விஷயம் தெரிஞ்சது. எல்லோரையும் சிரிக்க வைச்சேன். இறுதியாக, என் வாழ்க்கையில் இப்படி ஒரு துயரம் ஏற்பட்டதை தாங்கிக்க முடியல" என உருக்கமாகக் கூறியுள்ளார்.

    சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை

    சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை

    தொடர்ந்து பேசியுள்ள அவர், "சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஃபோன் பண்ணி அடிக்கடி உடல்நலம் குறித்து விசாரிக்கிறார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தால் மட்டும்தான் கொஞ்ச நாளைக்கு வாழ முடியும்னு சொல்லியிருக்காங்க. முதலமைச்சர் மனசு வைச்சா அது முடியும்.. நான் எல்லோருடனும் நடிச்சிருக்கேன்.. எல்லோரும் எனக்கு கருணை காட்டுவாங்கன்னு நம்புறேன்! எனக்கு நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து உதவினா நல்லா இருக்கும். மயில்சாமி, பெஞ்சமின்னு என்னுடன் நடிச்ச நடிகர்கள் எல்லாரும் வந்து பார்த்துட்டு போறாங்க.

    வடிவேலுவுடன் சேர்ந்து நடித்துள்ளேன்

    வடிவேலுவுடன் சேர்ந்து நடித்துள்ளேன்

    "வடிவேலு சாருடன் சேர்ந்த பிறகுதான் போண்டா மணின்னு ஒருத்தன் இருக்கான்னு வெளியில் தெரிய ஆரம்பிச்சேன். ஆனா, பெரிய அளவில் சொத்தெல்லாம் சேர்த்து வைக்கல. சொந்த வீடும் கிடையாது, என் மனைவி மாற்றுத்திறனாளி. என் பொண்ணு பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறா.. பையன் பத்தாவது படிக்கிறான். அன்றாடம் நான் சம்பாதிச்சுக் கொடுக்கிற பணத்தை வச்சுத்தான் குடும்பம் நடத்திட்டு இருக்கோம். இன்னும் புள்ளைங்கல கரை சேர்க்கணும்.. அதுங்களுக்கு நான் எதுவுமே சேர்த்து வைக்கல. அரசு மருத்துவமனைக்கு வந்ததால எனக்கு எந்த மருத்துவ செலவும் தேவைப்படல" எனக் கூறியுள்ளார்.

    விவேக் சார் இருந்தா ஓடி வந்துருப்பார்

    விவேக் சார் இருந்தா ஓடி வந்துருப்பார்

    தொடர்ந்து பேசியுள்ள போண்டா மணி, "அரசு மருத்துவமனையில் எந்தக் குறையும் இல்லாம கவனிச்சிக்கிறாங்க. சிறுநீரகம் ரெண்டும் செயலிழந்துட்டுன்னு சொன்னதும் வீட்ல எல்லாரும் பதறிட்டாங்க. புள்ளைங்க எல்லாரும் துடிச்சிட்டாங்க. அவங்களுடைய பதற்றத்தை தான் என்னால தாங்கிக்க முடியல. நான் யாருக்கும் துரோகம் பண்ணினது கிடையாது. எல்லாருக்கும் உதவி பண்ணியிருக்கேன். எனக்கு ஏன் கடவுள் இவ்வளவு பெரிய வியாதியைக் கொடுத்தார்னு துடிச்சி போயிட்டேன். அரசு மருத்துவமனைக்கு வந்ததால எனக்கு எந்த மருத்துவ செலவும் தேவைப்படல. செல் முருகன் கேள்விப்பட்டதும் இங்க வந்துப் பார்த்தார். விவேக் சார் உயிரோட இருந்திருந்தா நான் யார்கிட்டேயும் கை ஏந்த வேண்டிய அவசியமே வந்திருக்காது. அவரே ஓடிவந்து உதவியிருப்பார். அப்படிப்பட்ட நல்ல மனிதர். அதுக்கு எனக்கு கொடுத்து வைக்கல. அதே மாதிரி ஜே.கே ரித்தீஷ் அவர்கள் இருந்திருந்தாலும் எனக்காக உதவி பண்ணியிருப்பார் என கண் கலங்கியுள்ளார்."

    English summary
    Actor Bonda Mani entertained people with his comedy. Currently, both kidneys have failed and he is undergoing treatment at Omanturar Multi Specialty Hospital. So he asking for help from Cine celebrities
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X