எனக்கு சீன் புடிக்கலன்னா நானே எடிட்டிங்ல வெட்டீருவேன்... கே.எஸ்.ரவிக்குமாரிடம் கூறிய உதயநிதி

சென்னை: தடையற தாக்க, தடம் போன்ற படங்களை இயக்கியுள்ள மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி நடித்திருக்கும் திரைப்படம் கலகத் தலைவன்.

இந்த வார இறுதியில் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகிறது. தடம் படத்திற்கு பிறகு மகிழ் இயக்கியுள்ள படம் என்பதால் மிகுந்த எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிப்பிலிருந்து ஓய்வு பெற விரும்பும் உதயநிதி தான் எப்படி நடிக்க வந்தேன் என்று சுவாரசியமாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

கலகத் தலைவன்

கலகத் தலைவன்

உதயநிதி, ஆரவ், கலையரசன், நிதி உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். உதயநிதிக்கும் ஆரவ்விற்கு படத்தின் இறுதியில்தான் 10 நிமிடங்கள் தான் ஒன்றாக வரக் கூடிய காட்சிகள் இருக்கிறதாம். உதயநிதி வரும் காட்சிகளில் கலையரசன்தான் நடித்துள்ளாராம். கலகத் தலைவன் என்று இருந்தால் தலைப்பிற்கு சம்மதிக்க மாட்டேன் அது சர்ச்சைகளை உண்டாக்கும், கலகத் தலைவன் என்று இருந்தால்தான் தலைப்பிற்கு சம்மதிப்பேன் என்று உதயநிதி இயக்குநரிடம் தெளிவாக கூறினாராம்.

ஓகே ஓகே

ஓகே ஓகே

பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தை விநியோகம் செய்திருந்ததால் ராஜேஷிடம் பேசும்போது இளைஞர்களின் பல்சை அறிந்து திரைப்படங்கள் இயக்குகிறீர்கள் என்று உதய் பாராட்டியபோது, நீங்கள் நடிக்கிறீர்களா என்று ராஜேஷ் கேட்டாராம். ஒரு வரிக் கதை இருந்தால் கூறுங்கள் என்று உதய் கேட்க, கதாநாயகனும் அவரது நண்பரும் கதாநாயகியின் திருமணத்தை நிறுத்த பாண்டிச்சேரிக்கு செல்கிறார்கள் என்று ராஜேஷ் ஒன் லைன் கூற, உடனே ஓகே ஓகே படத்தில் நடிக்க உதயநிதி ஓகே சொல்லிவிட்டாராம்.

பாதி படம்

பாதி படம்

அந்தப் படத்தில் பாதிதான் நீங்கள் பார்த்துள்ளீர்கள். சந்தானம் மற்றும் மதுமிதாவிற்கு பெரிய காதல் காட்சிகள், ஆண்ட்ரியாவை வைத்து 20 நாட்கள் படப்பிடிப்பு என நிறைய காட்சிகளை படமாக்கி பின்னர் எடிட்டிங்கில் வெட்டிவிட்டார் ராஜேஷ். இப்போது அந்தப் படத்திற்கு இரண்டாம் பாகம் கேட்கிறார்கள். ஆனால், சந்தானம் தனது உடல் மொழியெல்லாம் மாற்றி கதாநாயகனாகிவிட்டார். ஹன்சிகாவிற்கு திருமணமாகப் போகிறது. அதனால் இரண்டாம் பாகத்திற்கு வாய்ப்பில்லை என்று உதய் கூறியுள்ளார்.

ஆதவன்

ஆதவன்

நான் தயாரித்த ஆதவன் திரைப்படத்தில் கிளைமாக்சிற்கு பின்னர் வரும் காட்சியில் என்னை சிறப்பு தோற்றத்தில் நடிக்கச் சொன்னார் கே.எஸ்.ரவிக்குமார். அந்தக் காட்சியில் நடித்தவர்கள் அனைவரும் அனுபவம் வாய்ந்தவர்கள். அவர்களுடன் நடிக்கும்போது கூச்சமாக இருந்தது. இருப்பினும் நான் சுமாராக நடித்ததை பார்த்து அவர்கள் கைதட்டினார்கள். ஆனால் முன்னதாகவே ரவிக்குமாரிடம், அந்தக் காட்சி சரியாக இல்லையென்றால் நானே எடிட் செய்து விடுவேன் என தான் கூறியதாக உதயநிதி கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X