»   »  நான் மன்னித்தாலும்... கிண்டல் செய்பவர்களுக்கு எதிராக பொங்கி எழுந்த சிம்பு!

நான் மன்னித்தாலும்... கிண்டல் செய்பவர்களுக்கு எதிராக பொங்கி எழுந்த சிம்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: என்னை கிண்டல் செய்பவர்களை நான் மன்னித்தாலும், கர்மா மன்னிக்காது என சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சிறு வயதிலேயே ‘லிட்டில் சூப்பர்ஸ்டார்' பட்டம் பெற்றவர் நடிகர் சிம்பு. திறமையான நடிப்பிற்கு கிடைத்த பாராட்டுகளைப் போல, காதல் உள்ளிட்ட கிசுகிசுக்களில் சிக்கி சிம்பு பரபரப்பாக பேசப்பட்டார்.

இந்நிலையில், சிலப்பல காரணங்களால் கடந்த மூன்று வருடங்களாக சிம்புவின் படம் எதுவும் ரிலீசாகவில்லை.

கைவசம் 4 படங்கள்...

கைவசம் 4 படங்கள்...

ஆனால், தொடர்ந்து வாலு, வேட்டை மன்னன் மற்றும் இது நம்ம ஆளு என தொடர்ந்து கைவசம் ரிலீசுக்கு மூன்று படங்கள் வைத்துள்ளார். இது தவிர தற்போது கௌதம்மேனன் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

கிண்டல்...

கிண்டல்...

சிம்புவிற்கு தயாராக உள்ள படங்கள் கூட ரிலீசாகாமல் இருப்பதை சிலர் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருவதாகத் தெரிகிறது. இதையெல்லாம் இதுவரை பொறுமையாக பார்த்து வந்த சிம்பு, தற்போது பொங்கி எழுந்து விட்டார்.

வெறுக்கிறார்கள்...

வெறுக்கிறார்கள்...

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில், ‘என்னை சிலர் இங்கு கிண்டல் செய்கிறார்கள், வெறுக்கிறார்கள்.

கர்மா மன்னிக்காது...

நான் அவர்களை மன்னித்தாலும், கர்மா அவர்களை ஒருபோதும் மன்னிக்காது. இதை அவர்கள் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

English summary
Some people r trying everything against me due to hatred and jealously ....But even if I forgive karma won't , hope they understand that :), actor Simbu tweeted.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil