எனது வாழ்க்கை புத்தகத்தில் ஜெய் பீம் படம் சிறப்பான அத்தியாயம்... ஷான் ரோல்டன் உற்சாகம்

சென்னை : நடிகர் சூர்யா நடிப்பில் டிஜே ஞானவேல் இயக்கியுள்ள படம் ஜெய் பீம்.

இந்தப் படம் அமேசான் ப்ரைமில் நாளை மறுதினம் தீபாவளியை முன்னிட்டு ரிலீசாக உள்ளது.

இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இதுவரை படத்தின் 3 பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

ஜெய் பீம் படம்

ஜெய் பீம் படம்

நடிகர் சூர்யா முதல்முறையாக வழக்கறிஞராக நடித்துள்ள படம் ஜெய் பீம். தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் அவர் இந்தப் படத்தை தயாரித்து நடித்துள்ளார். வரும் 2ம் தேதி இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

ஷான் ரோல்டன் இசை

ஷான் ரோல்டன் இசை

இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் ஷான் ரோல்டன். படத்தின் 3 பாடல்கள் இதுவரை வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் டீசர், ட்ரெயிலர் உள்ளிட்டவற்றின்மூலம் படத்தின் பின்னணியும் சிறப்பாக அமைந்துள்ளதை உணர முடிகிறது.

டிஜே ஞானவேல் இயக்கம்

டிஜே ஞானவேல் இயக்கம்

டிஜே ஞானவேல் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது. படம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. பழங்குடியின மக்களின் நீதிக்காக இந்தப் படத்தில் வழக்கறிஞராக போராடும் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். படத்தில் விஜோமோள் ஜோஸ், ரஜிஷா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ட்ரெயிலர் சாதனை

ட்ரெயிலர் சாதனை

படத்தின் ட்ரெயிலர் வெளியிடப்பட்டு 12 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை புரிந்தது. அதேபோல தெலுங்கில் 3 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. சூர்யாவின் முந்தைய படங்களின் டீசர்களை இந்தப் படத்தின் டீசர் பின்னுக்குத் தள்ளி அதிக பார்வைகளை பெற்றுள்ளது.

ஷான் ரோல்டன் கருத்து

ஷான் ரோல்டன் கருத்து

இந்நிலையில் இந்தப் படத்தின் பாடல்கள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் நிறைவு செய்துள்ள இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், ஜெய் பீம் படத்திற்கு குட்பை சொல்வது மிகவும் கடினமாக உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்தப் படம் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகியுள்ளதை நம்ப முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பான அத்தியாயம்

சிறப்பான அத்தியாயம்

தன்னுடைய வாழ்க்கை ஒரு புத்தகம் என்றால் அதில் ஜெய் பீம் படம் சிறந்த அத்தியாயமாக அமையும் என்றும் அவர் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முக திறமை கொண்ட ஷான் ரோல்டன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X