»   »  ரஜினி, ராஜமவுலி சேர்ந்தால் அவதார் ரெக்கார்ட் எல்லாம் எம்மாத்திரம்: பிரேமம் இயக்குனர்

ரஜினி, ராஜமவுலி சேர்ந்தால் அவதார் ரெக்கார்ட் எல்லாம் எம்மாத்திரம்: பிரேமம் இயக்குனர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: ராஜமவுலி ரஜினிகாந்துடன் ஒரு படம் பண்ணுவார் என நம்புகிறேன். அது நடந்தால் அவதார் வசூல் எல்லாம் முறியடிக்கப்படும் என்று இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் தெரிவித்துள்ளார்.

ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி 2 படம் பாக்ஸ் ஆபீஸில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. ரிலீஸான இரண்டே நாட்களில் இந்தியாவில் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

அமெரிக்க பாக்ஸ் ஆபீஸிலும் சாதனை படைத்துள்ளது பாகுபலி 2.

அல்போன்ஸ் புத்ரன்

அல்போன்ஸ் புத்ரன்

பிரேமம் பட புகழ் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது, இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஒரு படம் பண்ணுவார் என்று நம்புகிறேன். அது நடந்தால் உலக பாக்ஸ் ஆபீஸில் அவதார் படைத்த சாதனைகள் முறியடிக்கப்படும் என்றார்.

முடியுமா?

முடியுமா?

அவதார் படம் ரூ. 17 ஆயிரம் கோடி வசூல் செய்தது என்று தெரிந்து கொள்ளுங்கள். இது என்ன அர்த்தமற்ற போஸ்ட்... உங்கள் கணக்கை கபாலி கான் ரசிகர்கள் ஹேக் செய்தது போன்று உள்ளது என ஒருவர் அல்போன்ஸின் போஸ்ட்டை பார்த்து கமெண்ட் போட்டார்.

ஆசை

ஆசை

ரசிகரின் கமெண்ட்டை பார்த்த அல்போன்ஸ் கூறியிருப்பதாவது, நான் ரஜினிகாந்த் ரசிகன். இது என்னுடைய ஆசை பிரதர். நீங்கள் ஏன் வேறு நாட்டை சேர்ந்தவர் போன்று யோசிக்கிறீர்கள்? நாம் ஏன் முயற்சி செய்ய அல்லது குறைந்தபட்சம் கனவு காண அல்லது நம் ஆசையை பகிரக் கூடாது? செல்போனை பார்ப்பதற்கு முன்பு வயர்கள் இல்லாமல் பேச முடியும் என உங்களுக்கு தெரியுமா? சில விஷயங்கள் நாம் கனவு காணாவிட்டாலும் நடக்கும். நம்பிக்கை தானே தவிர லாஜிக் அல்ல என்னை முன்னெடுத்துச் செல்வது என தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

ராஜமவுலி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க வேண்டும் என தலைவரின் ரசிகர்கள் விரும்புகிறார்கள். அதை சம்பந்தப்பட்ட இருவரும் அல்லவா முடிவு செய்ய வேண்டும்.

English summary
Premam fame Alphonse Puthren posted on facebook saying, 'Hope director S.S. Rajamouli does one film with Superstar Rajinikanth...If it happens...the record of Avatar in worldwide box office will be second :D :D :D :D :D'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil