»   »  சபாஷ் நாயுடு... கம்போசிங்கைத் தொடங்கினார் இளையராஜா!

சபாஷ் நாயுடு... கம்போசிங்கைத் தொடங்கினார் இளையராஜா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கமல் ஹாஸன் நடிக்கும் சபாஷ் நாயுடு படத்துக்கான இசையமைப்பு வேலையைத் தொடங்கினார் இளையராஜா.

இளையராஜா - கமல் ஹாஸன் கூட்டணியில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் இனிய பாடல்கள் வெளிவந்திருக்கின்றன. இருவரும் இணைந்து பணியாற்றிய கடைசி படம் மும்பை எக்ஸ்பிரஸ்.


11 ஆண்டுகளுக்குப் பிறகு

11 ஆண்டுகளுக்குப் பிறகு

இந்தப் படத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் இருவரும் இணையவில்லை. கமல் ஹாஸன் வெவ்வேறு இசையமைப்பாளர்களுடன் பணியாற்றினார்.
சபாஷ் நாயுடு

சபாஷ் நாயுடு

இப்போது மீண்டும் இருவரும் சபாஷ் நாயுடு படத்துக்காக இணைந்துள்ளனர். இந்தப் படத்தில் நகைச்சுவைக்கும் காமெடிக்கும் மிகுந்த முக்கியத்துவம் தரப்பட்டு உருவாக்கப்பட்டு வருகிறது.


முதல் பாடல்

முதல் பாடல்

இந்தப் படத்துக்கான இசையமைப்பு வேலையை நேற்று தொடங்கினார் இளையராஜா. முதல் பாடலை ரம்யா என்எஸ்கே, விஷால் தத்லானி பாடினார்கள்.
அமெரிக்காவில்

அமெரிக்காவில்

இளையராஜா அனைத்துப் பாடல்களையும் இன்னும் ஓரிரு தினங்களில் முடித்துவிடுவார் என்றும் அதன் பிறகுதான் கமல் ஹாஸன் அமெரிக்காவுக்கு படப்பிடிப்புக்குச் செல்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


English summary
Isaignani’ Ilaiyaraaja has commenced composing for ‘Ulaganayagan’ Kamal Haasan’s Sabash Naidu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil