»   »  யுவன் மகள் பெயர் சூட்டு விழா.... பேத்தி ஷியாவை கொஞ்சி மகிழ்ந்த இளையராஜா

யுவன் மகள் பெயர் சூட்டு விழா.... பேத்தி ஷியாவை கொஞ்சி மகிழ்ந்த இளையராஜா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: யுவன் சங்கர் ராஜாவின் மகளுக்கு பெயர் சூட்டும் விழாவில் பங்கேற்ற இசைஞானி இளையராஜா பேத்தியை உற்சாகமாக கொஞ்சி மகிழ்ந்தார்.

இஸ்லாமிய மதத்திற்கு மாறிய யுவன் ஜாப்ரூன் நிஷா என்ற இஸ்லாமியப் பெண்ணை கடந்த ஆண்டு மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். அதனால், அவரது தந்தையான இளையராஜாவுக்கும், அவருக்குமிடையே மனஸ்தாபம் ஏற்பட்டது.

யுவன் பற்றிய விஷயங்களில் பாராமுகம் காட்டிவந்தார் இளையராஜா. இந்நிலையில், ஏப்ரல் மாதம் 7ம் தேதி யுவனுக்கு பெண் குழந்தை பிறந்தது. இசைஞானி இளையராஜாவின் மனைவியும் யுவன் சங்கர் ராஜாவின் தாயாருமான மறைந்த ஜீவாவின் பிறந்த நாள் ஆகும்.

யுவன் சங்கர் ராஜா மகள்

யுவன் சங்கர் ராஜா மகள்

இந்த நாளில் யுவன் சங்கர் ராஜா - ஜபருன்னிசா தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கவே இளையராஜா மகிழ்ச்சியடைந்தார். யுவன் சங்கர் ராஜா குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நேற்று நடந்தது.

பேத்திக்கு பெயர் சூட்டு விழா

பேத்திக்கு பெயர் சூட்டு விழா

பெயர் சூட்டு விழாவில் யுவன் மகளுக்கு ஷியா யுவன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. யுவன் பற்றிய மனக்குறையை விட்டுவிட்டு பேத்தியின் பெயர் சூட்டுவிழாவிற்கு வந்த இளையராஜா குழந்தையைத் தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்சி மகிழ்ந்துள்ளார்.

யுவன் திருமணம்

யுவன் திருமணம்

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது காதலியான லண்டனைச் சேர்ந்த பாடகி சுஜாயாவை கடந்த 2005ம் ஆண்டு திருமணம் செய்தார். 2008ம் ஆண்டு அவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

இரண்டாவது திருமணம்

இரண்டாவது திருமணம்

அதன் பிறகு அவர் ஷில்பா மோகன் என்பவரை கடந்த 2011ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஷில்பாவுடனும் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து ஷில்பா யுவனை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.

மதம் மாறிய யுவன்

மதம் மாறிய யுவன்

இந்நிலையில் தனது தாயின் மரணத்தால் மனமுடைந்த யுவன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார். யுவன் மதம் மாறியதால் அவரிடம் பேசாமல் இருந்த இளையராஜா, பேத்தி பிறந்த மகிழ்ச்சியில் யுவனுடன் மீண்டும் சந்தோமாக பேசத்தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Ilaiyaraaja at Yuvan Shankar Raja's daughter Ziya naming ceremony.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil