»   »  ராஜ்கண்ணு மகன் ஹீரோவாகும் களத்தூர் கிராமம்... இளையராஜா இசையமைக்கிறார்!

ராஜ்கண்ணு மகன் ஹீரோவாகும் களத்தூர் கிராமம்... இளையராஜா இசையமைக்கிறார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

எஸ் ஏ ராஜ்கண்ணுவின் மகன் நாயகனாக அறிமுகமாகும் களத்தூர் கிராமம் என்ற கிராமியப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.

கடந்த நாற்பது ஆண்டுகளாக தமிழ் திரையிசையில் கோலோச்சி வருபவர் இளையராஜா.

இன்றும் 30-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

சமீபத்தில் அவர் இசையில் வெளியான ஷமிதாப் பெரும் வரவேற்பைப் பெற்றது. பாடல்களும் பிரபலமாகின.

Ilaiyaraaja to compose for Kalathur Giramam

தமிழில் சில தினங்களுக்கு முன்புதான் ஒரு மெல்லிய கோடு என்ற புதுப் படத்தில் இளையராஜா ஒப்பந்தமானார். இப்போது அடுத்து, களத்தூர் கிராமம் படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் ‘தடையற தாக்க', ‘மீகாமன்' ஆகிய படங்களை இயக்கிய மகிழ்திருமேனியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மிதுன்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

இவர் 1977-ல் ரஜினி-கமல்-ஸ்ரீதேவி நடிப்பில் இயக்குனர் பாரதிராஜா இயக்கிய ‘16 வயதினிலே' படத்தை தயாரித்த எஸ்.ஏ.ராஜ்கண்ணுவின் மகன். ‘16 வயதினிலே' டிஜிட்டல் பதிப்பின் இயக்குனராகவும் மிதுன் குமார் பணியாற்றியுள்ளார்.

சரண் கே.அத்வைதன் இயக்கும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். மேலும், ஆடுகளம் கிஷோர், ஏக்னா செட்டி, தருண் சத்ரியா மற்றும் முன்னணி கன்னட நடிகர்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

தமிழ் மற்றும் கன்னடத்தில் இப்படம் வெளியாகிறது. முதல்கட்டப் படப்பிடிப்பு தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது.

இப்படத்தை ஏ.ஆர்.மூவி பாரடைஸ் நிறுவனம் சார்பில் சீனு ராஜ் தயாரிக்கிறார். இவருடன் ஸ்ரீஅம்மன் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பாக எஸ்.ஏ.ராஜ்கண்ணுவும் இணைந்து தயாரிக்கிறார்.

எஸ்ஏ ராஜ்கண்ணுவின் முதல் தயாரிப்பான பதினாறு வயதினிலே படத்துக்கு இளையராஜாதான் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Maestro Ilaiyaraaja has signed new movie Kalathur Giramam, in which producer SA Rajkannu's son Mithun Kumar launching as hero.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil