twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இளையராஜா கச்சேரி என்று சொல்லி வெளிநாட்டில் வசூல் மோசடி!

    By Shankar
    |

    தான் பங்கேற்கும் இசைக் கச்சேரி நடக்கப் போவதாகக் கூறி வெளிநாடுகளில் வசூல் மோசடி நடப்பதாகவும், அதுபோன்ற கச்சேரிகள் எதிலும் தான் பங்கேற்கவில்லை என்றும் இளையராஜா கூறியுள்ளார்.

    இளையராஜா தலைமையில் இசைக்கச்சேரி நடக்கப் போவதாகக் கூறி சில நாடுகளில் வசூல் வேட்டை நடந்து வருவதாக இளையராஜாவுக்கு அடுத்தடுத்து புகார்கள் வந்துள்ளன.

    Ilaiyaraaja denies any foreign concerts this year

    பேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் இளையராஜா கச்சேரி என்று கூறி சிலர் விளம்பரங்களையும் வெளியிட்டுள்ளார்களாம்.

    இதுபற்றி விசாரித்த இளையராஜா, உடனடியாக மறுப்பு தெரிவித்ததோடு, ரசிகர்கள் யாரும் ஏமாற வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இதுகுறித்து இளையராஜா கூறுகையில், "ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் நான் கச்சேரி நடத்தப் போவதாகக் கூறி சிலர் டிக்கெட் போட்டு விற்று வருவதாகக் கேள்விப்பட்டேன். இது முற்றிலும் தவறு. அப்படி யாரும் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை. எனவே இந்த மோசடிக்கு ரசிகர்கள் பலியாக வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்," என்றார்.

    English summary
    Ilaiyaraaja has denied any foreign concerts this year and appealed his fans to be careful in these frauds.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X