»   »  இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருதினை வழங்கினார் குடியரசுத் தலைவர்

இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருதினை வழங்கினார் குடியரசுத் தலைவர்

Posted By:
Subscribe to Oneindia Tamil
தமிழகத்தை சேர்ந்த 6 பேருக்கு பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசு தலைவர்

டெல்லி: நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷண் விருதினை இன்று இசைஞானி இளையராஜாவுக்கு வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

இந்தியாவின் மிக உயர்ந்த விருது பாரத் ரத்னா. அதற்கு அடுத்த நிலையில் இருப்பது பத்மவிபூஷண். இந்த ஆண்டுக்கான பத்மவிபூஷண் விருது, நாட்டின் ஒப்பற்ற இசை அமைப்பாளரான இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது.

Ilaiyaraaja gets Padma Vibhushan

ஏற்கெனவே 5 முறை சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதினை வென்றவர் இளையராஜா. ஏற்கெனவே பத்மபூஷண் விருதினையும் அவர் இந்திய அரசிடமிருந்து பெற்றுள்ளார்.

2018-ம் ஆண்டுக்கான பத்மவிபூஷண் விருது இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது. இந்த விருதினை இன்று டெல்லியில் நடந்த விழாவில் இளையராஜாவுக்கு வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

பத்ம விருதுகள் பெற்ற வேறு சில கலைஞர்கள், பிரமுகர்களுக்கும் இன்று குடியரசுத் தலைவர் விருதுகள் வழங்கினார்.

English summary
Music director Isaignani Ilaiyaraaja has been awarded the Padma Vibhushan award at a function today in Delhi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X