ரஜினிகாந்தே இளையராஜா பற்றி சொன்னாரே.. கேட்காத அஜித்தின் குட் பேட் அக்லி டீம்.. ஃபைனல் வார்னிங்!

சென்னை: இளையராஜாவுக்கு அரசு சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் ரஜினிகாந்தே இளையராஜா பற்றி சொன்னது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அஜித் குமாரின் குட் பேட் அக்லி படக்குழு இன்னமும் இளையராஜாவின் பாடல்களை நீக்கவில்லை என்பதால் அவமதிப்பு நோட்டீஸை இளையராஜா தரப்பு அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"குட் பேட் அக்லி" திரைப்படத்தில் நீதிமன்ற உத்தரவையும் மீறி தனது பாடல்களைப் பயன்படுத்தியதால், தயாரிப்பு நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தனது பாடல்களை நீக்குமாறும், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்குமாறும் அந்த நோட்டீஸில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனை மீறும்பட்சத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

இளையராஜா தனது பாடல்களுக்கு உரிய அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாகக் கூறி, படத் தயாரிப்பு நிறுவனமான 'மைத்ரி மூவி மேக்கர்ஸ்' நிறுவனத்திற்கு இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பான விரிவான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் இளையராஜாவின் இசையமைப்பில் உருவான 'இளமை இதோ இதோ', 'என் ஜோடி மஞ்சக் குருவி', 'ஒத்த ரூபாயும் தாரேன்' ஆகிய மூன்று பாடல்கள் அவருடைய அனுமதியில்லாமல் ரீமிக்ஸ் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் செயல் சட்டவிரோதமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

நோட்டீஸில், இந்த மூன்று பாடல்களையும் உடனடியாகப் படத்தில் இருந்து நீக்க வேண்டும் எனவும், சட்டவிரோதப் பயன்பாட்டிற்காக ரூ.5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் இளையராஜா கேட்டுள்ளார். இந்த நிபந்தனைகளை ஏழு நாட்களுக்குள் நிறைவேற்றாவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நோட்டீஸ் குறித்துப் பதிலளித்த தயாரிப்பு நிறுவனத்தினர், பாடல்களுக்கான உரிமையைக் கொண்டிருக்கும் இசை நிறுவனங்களிடம் இருந்து முறையாக அனுமதி பெற்றிருப்பதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், பாடல்களைப் பயன்படுத்தியதற்கான ஆட்சேபனையற்ற சான்றிதழ்களும் (NOC) தங்களிடம் இருப்பதாகவும் விளக்கமளித்துள்ளனர்.

இளையராஜா தனது பாடல்களின் காப்புரிமை தொடர்பாகத் தொடர்ந்து சட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறார். இசையமைத்த பாடல்களின் முழு உரிமையும் தங்களுக்கே சொந்தம் என தயாரிப்பாளர்கள் உரிமை கோரி வரும் நிலையில், ஒரு இசையமைப்பாளருக்கு அவரது படைப்புகளுக்கான 'தனிப்பட்ட உரிமை' (Moral Rights) உண்டு என்று இளையராஜா வலியுறுத்தி வருகிறார்.

'குட் பேட் அக்லி' பட விவகாரம் தற்போதைய காப்புரிமைச் சட்டத்தின் சிக்கல்களை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. இந்த விவகாரம் குறித்த அடுத்தகட்ட நடவடிக்கைகள் நீதிமன்றத்தின் வசம் உள்ளன.

ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு அனுப்பிய நோட்டீஸுக்கு, தயாரிப்பு நிறுவனம் சட்டப்பூர்வ உரிமையாளரிடம் இருந்து பாடல்களைப் பயன்படுத்த அனுமதி பெற்றதாகக் கூறியது. ஆனால், அந்த உரிமையாளர் யார் என்பதை தெரிவிக்கவில்லை என இளையராஜா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, 'குட் பேட் அக்லி' படத்தில் இந்த மூன்று பாடல்களையும் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவையும் மீறி தனது பாடல்கள் படத்தில் நீக்கப்படாததைக் கண்ட இளையராஜா, மீண்டும் மைத்திரி மூவி நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில், 'குட் பேட் அக்லி' படத்தில் இடம்பெற்றிருக்கும் தனது பாடல்களை நீக்க வேண்டும் எனவும், தனது சம்மதம் இல்லாமல் பாடல்களைப் பயன்படுத்தியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், பாடல்களை நீக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் தாக்கல் செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

இளையராஜா 50வது விழாவிலேயே ரஜினிகாந்த், எஸ்.பி. பாலசுப்ரமணியமே இளையராஜாவின் பாடல்களை இசைக் கச்சேரிகளில் பாடக் கூடாது என சட்டப்போராட்டம் நடத்தி உத்தரவ்ட எஸ்பிபியும் இனிமேல் இளையராஜா இசையில் தான் பாடிய பாடல்களையே பாடமாட்டேன் என்று கூறியது குறித்து பேசியிருந்தார். கூலி படத்திலும் இளையராஜா பாடல்கள் பயன்படுத்தியது தொடர்பாக வழக்குப் போட்டார் இளையராஜா என்றார் ரஜினிகாந்த். இந்நிலையில், அஜித் படத்துக்கு எதிராக இளையராஜா கடுமையான வார்னிங் கொடுத்துள்ளார். அவரது சட்டப்போராட்டம் என்ன ஆகும் என்பது சீக்கிரமே தெரிந்துவிடும்.

More from Filmibeat

Read more about: india copyright
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X