»   »  தயாரிப்பாளர்கள் நலனுக்காக இளையராஜா நடத்தும் மெகா கச்சேரி!

தயாரிப்பாளர்கள் நலனுக்காக இளையராஜா நடத்தும் மெகா கச்சேரி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் நலனுக்காக சென்னையில் இந்த மாதம் இசைக்கச்சேரி நடத்துகிறார் இளையராஜா.

ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்த இளையராஜா, தன்னை வைத்து படமெடுத்த தயாரிப்பாளர்கள் நலனுக்காக, பண ரீதியாக அவர்கள் பலன் பெற ஒரு கச்சேரி நடத்த சில ஆண்டுகளாகவே திட்டமிட்டு வந்தார்.

Ilaiyaraaja to perform mega concert in Chennai

இந்த ஆண்டு அதை நிறைவேற்றவிருக்கிறார். இந்தக் கச்சேரி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கம் அல்லது வர்த்தக மையத்தில் நடக்கவிருக்கிறது.

முதலில் வரும் ஜூன் 11-ம் தேதி இசை நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் இடம் முடிவாகாததால் மேலும் ஒரு வாரத்துக்கு தள்ளிப் போயுள்ளது இசை நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சி மூலம் திரளும் நிதியை அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் தரவேண்டும் என்பது இளையராஜாவின் விருப்பம்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி தாணு, செயலாளர் டி சிவா உள்ளிட்ட நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

English summary
Maestro Ilaiyaraaja is going to perform a mega concert for the benefit of Tamil film producers soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil