»   »  எந்த நாட்டுக்குப் போனாலும் இசைஞானியிடம் ரசிகர்கள் 'ரிபீட்டாக'க் கேட்கும் இரண்டு பாடல்கள்!

எந்த நாட்டுக்குப் போனாலும் இசைஞானியிடம் ரசிகர்கள் 'ரிபீட்டாக'க் கேட்கும் இரண்டு பாடல்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுவாகவே இசைஞானி இளையராஜா அவ்வளவாக மேடைக் கச்சேரி நடத்த மாட்டார். அரிதாக ஒன்றிரண்டு.

இரண்டாயிரத்துக்குப் பிறகுதான் இரண்டு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை என கச்சேரிகள் நடத்தினார்.

அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, துபாய், மலேசியா, லண்டன் போன்ற இடங்களில் இதுவரை ராஜாவின் கச்சேரிகள் நடந்திருக்கின்றன.

Ilaiyaraaja's abroad fans favorite songs

உள் நாட்டில் சென்னை, மதுரையில் நடத்தியிருக்கிறார்.

இரண்டாயிரம் ஆண்டுக்குப் பிறகு ராஜா எந்த நாட்டில் கச்சேரி நடத்தினாலும் அவரிடம் ரசிகர்கள் தவறாமல் கேட்கும் இரண்டு பாடல்கள்...

நான் தேடும் செவ்வந்திப் பூவிது...

இந்தப் பாடல் தொடங்கும் முன் இளையராஜா ஒரு ஆலாபனை செய்வார். அங்கு தொடங்கும் கைத்தட்டல், பாடல் முடியும் வரை தொடரும். அப்படி ஒரு இனிமை அந்தப் பாடலில்.

அடுத்த பாடல் சொர்க்கமே என்றாலும்...

துபாயில் நடந்த கச்சேரியில் இந்தப் பாடலை அப்படியே வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஏற்றபடி மாற்றிப் பாடி கைத்தட்டல்களை அள்ளினார் இளையராஜா.

இந்த ஆண்டும் இளையராஜாவின் பிரமாண்டமான கச்சேரி இந்த மாதம் சென்னையில் நடக்கிறது.

English summary
There two memorable songs repeatedly wanted by fans whenever Ilaiyaraaja performed concerts in abroad.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil