»   »  இசைஞானி போற்றிய இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா!

இசைஞானி போற்றிய இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மறைந்த இசைமேதை பாலமுரளி கிருஷ்ணா மீது பெரும் மதிப்பும் பக்தியும் கொண்டவர் இசைஞானி இசைஞானி. அவரை எந்த மேடையில், அல்லது நேரில் பார்த்தாலும் காலில் விழுந்து ஆசி பெறுவார் இளையராஜா.

இளையராஜா தனது புதிய படைப்புகளை முதலில் கேட்கத் தருவது பாலமுரளிகிருஷ்ணாவுக்குத்தான். திருவாசகம் ஆரட்டோரியோவை முழுவதும் முடித்துவிட்டு இளையராஜா முதலில் அழைத்தது பாலமுரளி கிருஷ்ணாவைத்தான். அந்த ஆல்பத்தை முழுமையாகக் கேட்ட பாலமுரளிகிருஷ்ணா, "இந்த திருவாசகத்தைக் கேட்கும் ஒவ்வொரு ஆத்மாவும் தூய்மையாகிவிடும்," என்றார்.

Ilaiyaraaja's respect on legend Balamuralikrishna

இளையராஜா 2011-ல் நடத்திய இசைக் கச்சேரியில் சின்னக் கண்ணன் அழைக்கிறான்.. பாடலை பாலமுரளி கிருஷ்ணாவை மேடையில் பாட வைத்தார். கிட்டத்தட்ட 81 வயது அப்போது பாலமுரளிகிருஷ்ணாவுக்கு. ஆனால் துளியும் பிசிறின்றி, குரல் நடுக்கமின்றி பாடலைப் பாடி முடித்தபோது ரசிகர்கள் ஆர்ப்பரித்தார்கள்.

ஏ ஆர் ரஹ்மான் ஆஸ்கர் விருது வென்று தாயகம் திரும்பிய பிறகு நடந்த பாராட்டு விழாவில், பாலமுரளி கிருஷ்ணாதான் இசையின் ஆதார ஸ்ருதி என்று புகழாரம் சூட்டினார் இளையராஜா.

English summary
Maestro Ilaiyaraaja has great respect on legend Balamuralikrishna.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil