»   »  இளையராஜாவின் 1000வது படம் தாரை தப்பட்டை இசை.. நள்ளிரவு வெளியானது.. ரசிகர்கள் உற்சாகம்!

இளையராஜாவின் 1000வது படம் தாரை தப்பட்டை இசை.. நள்ளிரவு வெளியானது.. ரசிகர்கள் உற்சாகம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இசைஞானி இளையராஜா இசையமைத்த 1000வது படமான தாரை தப்பட்டை படப் பாடல்கள் இன்று அதிகாலை இணையத்தில் வெளியானது.

பாலா இயக்கத்தில் சசிகுமார் - வரலட்சுமி - சுரேஷ் களஞ்சியம் நடித்துள்ள படம் தாரை தப்பட்டை. நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் இது.


பொங்கல் தினமான ஜனவரி 14-ம் தேதி இந்தப் படம் உலகெங்கும் வெளியாகிறது.


சாதனை

சாதனை

இந்தப் படத்தின் இசை வெளியீட்டை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்திருந்தார் இயக்குநர் பாலா. 1000 படங்களுக்கு இசையமைத்து பெரும் சாதனை செய்த இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழாவாக இதைக் கொண்டாடவும் முடிவு செய்திருந்தார்.


வேண்டாம் விழா

வேண்டாம் விழா

ஆனால் சமீபத்தில் பெய்த பெரும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் இப்படி ஒரு விழா வேண்டாம் என இளையராஜா உறுதியாகக் கூறிவிட்டார். எந்த விழாவும் இல்லாமல் சாதாரணமாக இசையை வெளியிடுங்கள் என்று அவர் கூறிவிட்டதால், இணையத்திலேயே தாரை தப்பட்டை இசையை வெளியிட்டுவிட்டார் பாலா.


அதிகாலை

அதிகாலை

இன்று அதிகாலை 12.01 மணிக்கு தாரை தப்பட்டை பாடல்கள் யு ட்யூபில் வெளியாகின. பாடல்களைக் கேட்க ஏராளமானோர் காத்திருந்தனர்.


பரவசம்

பரவசம்

இரண்டு தீம் மியூசிக் மற்றும் நான்கு பாடல்கள் அடங்கிய இந்த தொகுப்பைக் கேட்ட ரசிகர்கள் பரவசமாகி தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.


டீசர்

டீசர்

இந்த பாடல்களுடன் படத்தின் 30 நொடி டீசர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார் பாலா.


English summary
Ilaiayaraaja's 1000th film Tharai Thappattai audio was launched online Today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil