»   »  'சில நேரங்களில்'... ரஹ்மானுக்கு பதில் இளையராஜா இசை!

'சில நேரங்களில்'... ரஹ்மானுக்கு பதில் இளையராஜா இசை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சில சமயங்களில்... அமலா பால் தயாரிப்பில் ப்ரியதர்ஷன் இயக்கும் படத்தின் தலைப்பு இது.

சில சமயங்களில் சில படங்கள் அறிவிக்கப்படும் போதே எதிர்ப்பார்ப்பை தூண்டும். அந்த தூண்டுதலுக்கு முக்கிய காரணம் அந்த படத்தில் இணையும் திரை உலக ஜாம்பவான்கள்தான். பிரபு தேவா ஸ்டூடியோஸ் உடன் இணைந்து திங்க் பிக் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் 'சில சமயங்களில்' படத்தில் பெரும் ஜாம்பவான்கள் கைகோர்த்துள்ளனர்.

Ilaiyaraaja signes Priyadarshan movie

இயக்குநர் விஜய், நடிகை அமலா பால், ப்ரியதர்ஷன் ஆகியோருடன் இசைஞானி இளையராஜாவும் இந்தப் படத்தில் இணைகிறார்.

சமீபத்தில் 'சில சமயங்களில்' படத்தை இளையராஜாவுக்கு திரையிட்ட ப்ரியதர்ஷன், இசை அமைக்க இளையராஜாவின் ஒப்புதலை கேட்டிருக்கிறார். படம் பார்த்த இசை ஞானியும் படத்தின் உயர்ந்த தரம் குறித்த தன் கருத்தை தெரிவித்த பின்னர்,'சில சமயங்களில்' படத்துக்கு இசை அமைக்க ஒப்புக் கொண்டாராம்.

இந்தப் படத்துக்கு முதலில் ரஹ்மானிடம் போகத்தான் திட்டமிட்டிருந்தார்களாம் இயக்குநர் விஜய் தரப்பில். ஆனால் ப்ரியதர்ஷன் சாய்ஸ் இளையராஜாவாக இருந்ததால், பிரசாத் ஸ்டுடியோவைச் சரணடைந்தனர்.

English summary
Maestro Ilaiyaraaja has officially signed for Priyadarshan's Sila Nerangalail movie jointly produced by Amala Paul and Prabhu Deva. Remember, initially the producers have approached AR Rahman for the same.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil