தனித்தனியாக நன்றி சொல்ல முடியவில்லை...உருக்கமாக நன்றி சொன்ன இளையராஜா

சென்னை : இசையில் பல சாதனைகள் படைத்து இசையின் ராஜாவாக வாழ்ந்து கொண்டிருப்பவர் இசைஞானி இளையராஜா.உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.

Recommended Video

Ilayaraja ராஜ்யசபா M.P-யாக நியமனம்... மகிழும் தமிழகம் *Kollywood | Filmibeat Tamil

அன்னக்கிளி படத்தின் முலம் இசையமைப்பாளராக சினிமா உலகிற்கு அறிமுகமானவர் இளையராஜா. இசையில் புதிய பரிணாமத்தை கொண்டு வந்து, தனது இசையை பட்டி தொட்டி எங்கும் இசைக்க செய்தவர்.

தமிழ், இந்தி, மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் 1000 க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்து, ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டார்.இசை என்றாலே இளையராஜா தான் என சொல்லும் அளவிற்கு சிகரம் தொட்ட இளையராஜா, தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார்.

இளையராஜாவுக்கு எம்பி பதவி

இளையராஜாவுக்கு எம்பி பதவி

இளையராஜாவிற்கு மேலும் கெளரவம் சேர்க்கும் வகையில் மாநிலங்களவை நியமன எம்பி பதவி வழங்கி இந்திய அரசு அவரை கெளரவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பிரதமர் மோடி, இளையராஜாவிற்கு வாழ்த்து சொல்லியும் ட்வீட் போட்டிருந்தார்.

பிரபலங்கள் வாழ்த்து

பிரபலங்கள் வாழ்த்து

இந்த அறிவிப்பு வெளியானதும் பாரதிராஜா, ரஜினிகாந்த், கமல்ஹாசன், மோகன்லால்,குஷ்பு உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இளையராஜாவிற்கு ட்விட்டரில் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து, பாராட்டி வருகின்றனர்.

ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம்

ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம்

கமல் தனது ட்விட்டர் பதவியில் இளையராஜாவின் சாதனையை கெரளவிக்க ஒரு மனதாக ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம். இருந்தாலும் இந்த மாநிலங்களவை உறுப்பினர் நியமனத்தையும் வாழ்த்துவோம் என குறிப்பிட்டிருந்தார். இது அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதாக அமைந்திருந்தது.

இளையராஜா எங்கே இருக்கிறார்

இளையராஜா எங்கே இருக்கிறார்

இந்நிலையில் இளையராஜா தற்போது அமெரிக்காவில் இருந்து வருகிறார். இசை கச்சேரிக்காக அமெரிக்கா சென்றுள்ள இளையராஜா, தனக்கு அளிக்கப்பட்டுள்ள கெளரவத்திற்காக வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

தனித்தனியாக நன்றி சொல்ல முடியவில்லை

தனித்தனியாக நன்றி சொல்ல முடியவில்லை

ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், என்மீது அன்பு கொண்ட ஏராளமான அபிமானிகள் இந்திய அரசு எனக்களித்த கௌரவமான அங்கீகாரத்திற்காகப் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்திருந்த வண்ணமிருக்கின்றனர் .உங்கள் அனைவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல இயலாதாகையால் எல்லோருக்கும்

என் உளங்கனிந்த நன்றி... from Seattle, USA என குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X