லட்சுமி ராமகிருஷ்ணன் படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா...ஷுட்டிங் முடிய போகுதாமே
சென்னை : மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பிரபலமான நடிகையாக இருப்பவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் பல படங்களில் சப்போர்ட்டிங் ரோல்களில் நடித்துள்ளார்.
தமிழில் பிரிவோம் சந்திப்போம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பொய் சொல்ல போறோம், எல்லாம் அவர் செயல், ஈரம், நாடோடிகள், வேட்டைக்காரன், ஆதவன், ராவணன், பாஸ் என்கிற பாஸ்கரன், நான் மகான் அல்ல, விண்ணை தாண்டி வருவாயா, கதகளி, சுட்ட கதை உள்ளிட்ட பல படங்களில் அம்மா ரோல் உள்ளிட்ட ரோல்களில் நடித்துள்ளார்.

முதல் படத்திலேயே சினேகாவிற்கு அம்மாவாக நடித்த லட்சுமி ராமகிருஷ்ணன், பெரும்பாலும் அம்மா ரோல், அதுவும் கோபக்கார அம்மா ரோலிலேயே நடித்துள்ளார். சிறந்த துணை நடிகைக்காக பல விருதுகளை வென்றுள்ளார்.பிரபல நடிகையும், டைரக்டருமான லட்சுமி ராமகிருஷ்ணன் ஆரோஹணம் என்ற படத்தின் மூலம் டைரக்டரானவர்.அந்த படத்தில் கெஸ்ட் ரோலிலும் நடித்திருந்தார். தொடர்ந்து அம்மணி, ஹவுஸ் ஓனர் உள்ளிட்ட சில படங்களை இயக்கி உள்ளார்.
தனது அடுத்த படைப்பாக புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். சமுத்திரக்கனி, அபிராமி, மிஷ்கின், ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய ரோல்களில் நடித்து வருகின்றனர். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் ஷுட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த சமயத்தில் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார் என்ற தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டோவுடன் பதிவிட்டுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன். படத்தின் ரீ ரெக்கார்டிங் பணிகள் நடந்து வருவதாகவும் லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இளையராஜாவுடன் பணியாற்றுவது அற்புதமான உணர்வு. தான் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இளையராஜாவுடன் எடுத்துக் கொண்ட போட்டோக்கள் மட்டுமின்றி, தான் எடுத்துக் கொண்டிருக்கும் புதிய படத்தின் போட்டோக்கள் சிலவற்றையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன். விரைவில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
லட்சுமி ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள போட்டோக்களை வைத்து பார்த்தால் நிச்சயம் இது குடும்ப சென்டிமென்ட் படமாக இருக்கும் என தெரிகிறது. அது மட்டுமின்றி, மிஷ்கின் வேஷ்டி சட்டையில் கெத்தாக நடந்து வரும் போட்டோவை பார்க்கையில் இந்த படத்தில் மிஷ்கின் வில்லன் ரோலில் நடிக்கலாம் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











