»   »  தாரை தப்பட்டை... படப்பிடிப்பை நேரில் பார்த்தார் இளையராஜா!

தாரை தப்பட்டை... படப்பிடிப்பை நேரில் பார்த்தார் இளையராஜா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தான் இசையமைக்கும் 1000வது படமான தாரை தப்பட்டை படப்பிடிப்பை நேரில் சென்று பார்த்தார் இளையராஜா.

Ilaiyaraaja visits Thaarai Thappattai shooting spot

பாலா இயக்கத்தில் உருவாகி வரும் தாரை தப்பட்டை படத்தில் சசிகுமார், வரலட்சுமி நடிக்கிறார்கள். நாட்டுப்புறக் கலையை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தை தஞ்சை மற்றும் கும்பகோணத்தில் படமாக்கி வருகிறார் பாலா.

Ilaiyaraaja visits Thaarai Thappattai shooting spot

கடந்த இரண்டு மாதங்களாக அந்தப் பகுதியில் முகாமிட்டுள்ளது பாலாவின் குழு.

Ilaiyaraaja visits Thaarai Thappattai shooting spot

இப்போது தஞ்சை - கும்பகோணம் சாலையில் உள்ள கரந்தை என்ற கிராமத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

Ilaiyaraaja visits Thaarai Thappattai shooting spot

இந்த நிலையில் படப்பிடிப்பை நேரில் பார்க்க கரந்தை கிராமத்துக்கு வந்தார் இளையராஜா. அவரை இயக்குநர் பாலா, நாயகன் சசிகுமார், நாயகி வரலட்சுமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

Ilaiyaraaja visits Thaarai Thappattai shooting spot

இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகள் குறித்து இளையராஜாவுக்கு விளக்கினார் பாலா.

இந்தப் படத்துக்காக 12 பாடல்களை உருவாக்கிக் கொடுத்துள்ளார் இளையராஜா.

English summary
Maestro Ilaiyaraaja has visited Bala's Thaarai Thappattai shooting spot today.
Please Wait while comments are loading...