»   »  ருத்ரமாதேவி 3 டி ட்ரைலர்... இளையராஜா பாராட்டு!

ருத்ரமாதேவி 3 டி ட்ரைலர்... இளையராஜா பாராட்டு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

குணசேகர் இயக்கத்தில் அனுஷ்கா நடித்துள்ள ருத்ரமாதேவி படத்தின் முன்னோட்டக் காட்சியைப் பார்த்து ரசித்தார் இசைஞானி இளையராஜா.

பல கோடி ரூபாய் செலவில் தமிழ், தெலுங்கில் தயாராகியுள்ள படம் ருத்ரமாதேவி. குணசேகர் எழுதி இயக்கி தயாரித்துள்ளார்.

இளையராஜா

இளையராஜா

இந்தப் படத்தை தமிழில் வெளியிடுகிறது ராமநாராயணனின் தேனாண்டாள் பிலிம்ஸ்.

படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்களுக்கு ஏற்கெனவே இசையமைத்து முடித்துவிட்டார். விரைவில் இசை வெளியீட்டு விழா நடக்கவிருக்கிறது.

சத்யம் அரங்கில்

சத்யம் அரங்கில்

சமீபத்தில் இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியானது. இதனை இளையராஜாவுக்கு சத்யம் திரையரங்கில் திரையிட்டுக் காட்டினார் இயக்குநர் குணசேகர்.

3 டி கண்ணாடி அணிந்து

3 டி கண்ணாடி அணிந்து

3 டியில் தயாராகியுள்ள இந்த ட்ரைலரை, அதற்கான கண்ணாடி அணிந்து இளையராஜா பார்த்தார்.

முன்னோட்டக் காட்சி மிகச் சிறப்பாக வந்துள்ளதாக இளையராஜா பாராட்டினார்.

பின்னணி இசை

பின்னணி இசை

படத்துக்கான பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகளை ஆரம்பித்துள்ளார் இளையராஜா. விரைவில் இந்தப் படம் 2000 அரங்குகளில் உலகெங்கும் வெளியாகிறது.

English summary
Maestro Ilaiyaraaja has watched the trailer of Gunasekar's Tamil Telugu bilingual 3D flick Rudhramadevi at Sathyam Cinemas.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil