»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

இசை ஞானி இளையராஜா புது அவதாரம் எடுத்துள்ளார். மசாலாப் படங்களுக்கும், காதல் கதைகளுக்கும்,சஸ்பென்ஸ் திரில்லர்களுக்கும் இசை மீட்டி வந்த அவர் சமீப காலமாக சமூக விழிப்புணர்வு கொண்ட படங்கள்,குறும்படங்களுக்கு ஏராளமான அளவில் இசையமைக்க ஆரம்பித்துள்ளார்.

இசை ஞானியின் இசை ஞானம் அனைவரும் அறிந்ததுதான். "அக்னி நட்சத்திர"த்தில் தபேலாவையேபயன்படுத்தாமல் இசை மீட்டிய அதே கைககள்தான் "பாரதி"க்கும் இசையமைத்து அவார்டு வாங்கிக் கொடுத்தன.

தமிழ்த் திரையுலகில் இத்தகைய வெரைட்டியைக் கொடுக்கக் கூடிய திறமை படைத்த ஒரே இசையைமப்பாளர் ராஜாமட்டுமே.

இசை ஞானியின் இசையில் சமீபத்தில் வெளிவந்த "குட்டி" பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. "பாரதி"க்கு எப்படிஇளையராஜாவின் இசை மிகப் பெரிய பலமாக அமைந்ததோ, அதேபோல, "குட்டி"யிலும் பெரும் முக்கியத்துவம்பெற்றுவிட்டார்.

டைரக்டர் மகேந்திரன் இயக்கி வரும் "சாசனம்" படத்திற்கும் இளையராஜாதான் இசை. தற்போது தயாரிப்பில்இருக்கும் இந்தப் படம் வெளியாகும்போது, நிச்சயம் பெரும் ஹிட் ஆகும். ராஜாதான் அங்கு இருக்காரே!

அதே போல "கருவேலம்பூக்கள்" என்ற குறும்படத்திற்கும் இளையராஜா இசையமைத்தார். அது தேசிய திரைப்படவிழாக்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது. "நாக் அவுட்" என்ற குறும்படத்திலும் இளையராஜாவின் இசைபெருமளவில் பேசப்பட்டது.

இப்போது, மேலும் 2 குறும்படங்கள் இளையராஜாவின் கைவண்ணத்தில் உருவாகி வருகின்றன. 2 படங்களையும்தாமரை செந்தூர்பாண்டி இயக்கியுள்ளார். ஒரு படம், மீனவர் வாழ்க்கை குறித்தது. மற்றொன்று, குழந்தை இல்லாத்தம்பதி குறித்த கதை.

முதல் படத்திற்குப் பெயர் "ஏலேலங்கிளியே". முக்கால் மணி நேரம் ஓடக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளஇந்தப் படத்தில் வடிவுக்கரசி, மெளனிகா ஆகியோர் நடித்துள்ளனர்.

மீனவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இவர்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். அந்தக் குடும்பத்தில் நடக்கும்போராட்டத்தை அழகாக சொல்லியிருக்கிறார்கள். கடலோரக் கதையான இதில் இசையை கவிதை மழையாகபொழிந்திருக்கிறார் இளையராஜா. "கடலோரக் கவிதைகளில்" இசை வடித்த ராஜா, இதில் மட்டும் சோடைபோய்விடுவாரா என்ன?

இன்னொரு படம் "மகனே மகனே". இது அரை மணி நேரப் படம்தான். ஆனால் பார்ப்பவர்களை சுண்டி இழுத்துவிடுகிறது இதன் கதை ஓட்டம்.

கோவை சரளாவும், ஆர்.சுந்தர்ராஜனும் குழந்தையில்லாத ஏழை கிராமத் தம்பதியினர். விபத்தில் சிக்கிய ஒருசிறுவனின் உயிரைக் காக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள். கையில் காசு இல்லாத நிலையில் கோவை சரளா, தனதுகாதில் தொங்கும் தண்டட்டியை எடுத்து மருந்துக் கடையில் அடகு வைத்து, மருந்து வாங்குகிறார்.

கடைசியில் பார்த்தால், அந்த மருந்துக் கடைக்காரரின் பையன்தான் விபத்தில் அடிபட்ட சிறுவன் எனத் தெரியவருகிறது. உணர்வுகளின் கலவையாக இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள் சரளாவும், சுந்தர்ராஜனும். இசைஞானியின் இசை படத்தோடு நம்மை லயிக்க வைத்து விடுகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil