»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

"துள்ளுவதோ இளமை" படக் காட்சிகளை ஒளிபரப்பக் கூடாது என்று தனியார் சாட்டிலைட் டிவிக்களுக்கு சென்னைஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இப்படத்தை எதிர்த்து சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவில்,

"துள்ளுவதோ இளமை" படத்தில் ஆபாசமான பல காட்சிகள், வார்த்தைகள் வருகின்றன.

இவை இளைஞர்கள் மனதைக் கெடுக்கும் விதத்தில் இருப்பதால் இவற்றை டிவிக்களில் ஒளிபரப்பக் கூடாது என்றுஉத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி முருகேசன் ஆகியோர்அடங்கிய முதலாவது பெஞ்ச் விசாரித்தது. பின்னர் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியதாவது:

மனுதாரர் கூறியபடி "துள்ளுவதோ இளமை" படத்தில் பல காட்சிகளும் வசனங்களும் ஆபாசமாகத் தான் உள்ளன.அவை இளைஞர்களின் மனதைக் கெடுக்கும் விதத்திலும் அமைந்துள்ளன.

எனவே சன் டிவி, ராஜ் டிவி, ஜெயா டிவி மற்றும் விஜய் டிவி ஆகிய தனியார் டிவிக்கள் "துள்ளுவதோ இளமை"படத்தின் எந்தக் காட்சியையும் ஒளிபரப்பக் கூடாது என்று தடை விதித்து நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில்உத்தரவிட்டனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil