»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஏ சான்றிதழ் பெற்ற துள்ளுவதோ இளமை படத்தை சிறுவர்களையும் பார்க்க அனுமதித்த திரையரங்கில் இருந்துபடப் பெட்டி பறிமுதல் செய்யப்பட்டது.

புதுமுக நடிகர், நடிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட துள்ளுவதோ இளமை படத்தில் பல முகம் சுளிக்கவைக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. பிளஸ் பள்ளி மாணவர்களின் கதை என்ற பெயரில் பல சூடானகாட்சிகள், வசனங்களும் இடம் பெற்றுள்ளன.

தமிழகத்தில் இளசுகள் வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் கோடிக்கணக்கில் வசூல் செய்துஅனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. படத்தைப் பார்க்க பெண்கள் யாரும் தியேட்டர்களுக்குவரவில்லை. அந்த அளவுக்கு காட்சிகள் உள்ளன.

இந்தப் படத்துக்கு ஏ சர்டிபிகேட் தரப்பட்டுள்ளது. ஆனால், இதைப் பார்க்க சிறுவர்களையும் திரையரங்குகள்அனுமதித்துக் கொண்டு தான் உள்ளன. இப்படிப்பட்ட தியேட்டர்களில் ஒன்றில் நேற்று ரெய்ட் நடந்தது.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு தியேட்டரில் சென்சார் போர்ட் அதிகாரிகளும் போலீசாரும் கூட்டாகசோதனை நடத்தியபோது பள்ளிச் சிறுவர்கள் பலரும் ஸ்கூலுக்கு கட் அடித்துவிட்டு இந்தப் படத்தை பார்த்துக்கொண்டிருந்தனர்.

ஸ்கூல் யூனிபார்மில் அவர்கள் இருந்தனர். சிறுவர்கள் அதிலும் பள்ளி மாணவர்கள் என்பதை அறிந்தும்அவர்களுக்கு டிக்கெட் வழங்கிய தியேட்டர் மீது வழக்குப் பதிவு செய்த அதிகாரிகள் படப்பெட்டியை பறிமுதல்செய்தனர்.

தமிழகம் முழுவதும் இதுபோன்ற திடீர் சோதனைகள் நடக்கும் என்று தெரிகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil